அவமதிக்கும் துணைவேந்தர்கள் மேற்கு வங்க கவர்னர் ஆவேசம்

Updated : டிச 24, 2021 | Added : டிச 24, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
கோல்கட்டா :தான் அழைப்பு விடுத்த கூட்டத்தை புறக்கணித்த தனியார் பல்கலை வேந்தர், துணை வேந்தர்களுக்கு மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.மேற்கு வங்கத்தில் மாநில கவர்னர் ஜக்தீப் தன்கருக்கும், முதல்வர் மம்தாவுக்கும் இரண்டு ஆண்டுகளாக பனிப்போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள், துணை
 துணைவேந்தர்கள், அவமதிப்பு, மேற்கு வங்க கவர்னர்

கோல்கட்டா :தான் அழைப்பு விடுத்த கூட்டத்தை புறக்கணித்த தனியார் பல்கலை வேந்தர், துணை வேந்தர்களுக்கு மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்கத்தில் மாநில கவர்னர் ஜக்தீப் தன்கருக்கும், முதல்வர் மம்தாவுக்கும் இரண்டு ஆண்டுகளாக பனிப்போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள், துணை வேந்தர்கள் கூட்டத்தை கவர்னர் மாளிகையில், கவர்னர் ஜக்தீப் தன்கர் நடத்தினார்.


latest tamil news


கொரோனா பரவல்காரணமாக தங்களால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என, தனியார் பல்கலை வேந்தர்கள் தெரிவித்தனர். இதையடுத்து (நேற்று ) 23ம் தேதிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.ஆனாலும் இந்த கூட்டத்தில் மேற்கு வங்கத்தில் உள்ள தனியார் பல்கலைகளின் வேந்தர்கள், துணை வேந்தர்கள் பங்கேற்கவில்லை. இதற்காக கவர்னர் தன்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது பற்றி அவர் கூறியதாவது:கவர்னர் என்ற முறையில் பல்கலைகளின் வேந்தர்கள், துணை வேந்தர்கள் கூட்டத்தை கூட்டினேன். ஆனால் இந்த கூட்டத்தை தனியார் பல்கலை வேந்தர்கள், துணைவேந்தர்கள் புறக்கணித்தது துரதிர்ஷ்டவசமானது. இதை நியாயப்படுத்த முடியாது. மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை. ஆட்சியாளர்கள் விருப்பத்தின் ஆட்சி தான் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr SS - Chennai,இந்தியா
24-டிச-202122:38:31 IST Report Abuse
Dr SS When video conferancing is done even in global meetings, this "in-person" meeting itself should have been avoided.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
24-டிச-202121:57:05 IST Report Abuse
sankaseshan பேய் அரசாண்டா இப்படித்தான் நடக்கும்
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
24-டிச-202121:23:05 IST Report Abuse
GMM தனியார் பல்கலை துணைவேந்தர்களுக்கு மேற்கு வங்க ஆளுநர் கடும் கண்டனம். அதிகாரம் இல்லாத அரசியல்வாதிகள் தான், கண்டனம், மறியல் போன்று பேட்டி கொடுப்பர். அரசியல் சாசனம் அதிகாரம் ஆளுனருக்கு வழங்கியுள்ளது. பணியாத வேந்தர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் பொறுப்பு வேந்தர்களை ஆளுநர் உடன் நியமனம் செய்ய வேண்டும். மம்தா போன்ற அரசியல்வாதிகள் மக்களை கூட்டி மிரட்டுவர். ஒருபோதும் அஞ்ச வேண்டாம். மாநில மக்களை / நிர்வாக ஒழுங்கை பாதுகாக்க தான் ஆளுநர் பதவி. புலம்ப, எச்சரிக்கை செய்ய வேண்டாம். TV மாஃபியாகள் கதறும். அரசியல் உள்நோக்க கருத்து கூறும். துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக ஒழுக்கம் இல்லாத வேந்தர்கள் எப்படி பட்ட மாணவர்களை உருவாக்குவார்கள்? என்று எண்ணி பார்க்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X