சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மாமியாரின் கரிசனம்!

Added : டிச 24, 2021 | கருத்துகள் (6)
Advertisement
மாமியாரின் கரிசனம்!என்.பாலு, விளாத்திகுளம், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுவாக மாமியாரும், மருமகளும் எப்போதும் எலியும், பூனையுமாக தான் இருப்பர்.நிலவரம் இவ்வாறிருக்க, முன்னாள் உலக அழகியும், நடிகையும், பிரபல ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக, அவரின் மாமியார் ஜெயாபச்சன், பார்லிமென்டில்


மாமியாரின் கரிசனம்!என்.பாலு, விளாத்திகுளம், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுவாக மாமியாரும், மருமகளும் எப்போதும் எலியும், பூனையுமாக தான் இருப்பர்.
நிலவரம் இவ்வாறிருக்க, முன்னாள் உலக அழகியும், நடிகையும், பிரபல ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக, அவரின் மாமியார் ஜெயாபச்சன், பார்லிமென்டில்
தீப்பொறி பறக்க பேசியுள்ளார்.மத்திய அமெரிக்காவில் உள்ள பனாமா நாட்டில் செயல்படும் ஒரு வங்கியில், சட்டவிரோதமாக, 2004 முதல் வருமானவரி செலுத்தாமல் முதலீடு செய்திருக்கிறார், ஐஸ்வர்யா.
'மொசார் பொன்சேகா' என்ற சர்வதேச சட்ட அமைப்பு, சமீபத்தில் இந்த விபரத்தை வெளியிட்டது.ஐஸ்வர்யா மட்டுமின்றி இந்தியாவை சேர்ந்த விளையாட்டு பிரபலங்கள், சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட, 500 பேரின் விபரங்கள் அதில் இடம் பெற்றிருந்தது.
அதைத் தொடர்ந்து, வெளிநாட்டு வங்கியில் பணம் முதலீடு செய்திருப்பது குறித்து, டில்லியில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள், ஐஸ்வர்யாவிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.
இதை கண்டு வெகுண்ட ஐஸ்வர்யாவின் மாமியாரும், நடிகையும், சமாஜ்வாதி எம்.பி.,யுமான ஜெயா பச்சன், பார்லிமென்டில் கொதித்து கொந்தளித்து விட்டார்.
தாங்கள் ஈட்டிய பொருளை, வெளிநாட்டு வங்கியில் முதலீடு செய்வதைக் கூட தடை செய்வது எல்லாம் ஒரு நாடா? காங்., ஆட்சியில் எவ்வளவு சர்வ சாதாரணமாக வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்து கொண்டிருந்தோம். அதை தடை செய்யும் இந்த பா.ஜ., அரசு நிலைக்குமா, நீடிக்குமா என்ற பொருள்படும்படியாக, ஜெயா பச்சன் பேசி இருக்கிறார்.
அதாவது, 'உ.பி., சட்டசபை தேர்தலில் தோற்று விடுவோம் என, பா.ஜ.,வுக்கு பயம் வந்து விட்டது. அதன் காரணமாகவே, வருமான வரித்துறை சோதனையை ஏவி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுகின்றன என மத்திய அரசு கூறுவதை நம்புவதற்கு, நாங்கள் ஒன்றும் படிப்பறிவற்றோர் அல்ல' என்று எரிமலையாய் வெடித்து இருக்கிறார்.ஜெயா பச்சனின் ஆவேச பேச்சை கேட்கும் அப்பாவி மக்களுக்கு, 'ஆஹா! முன்னாள் நடிகையாக இருந்தாலும், நாட்டுக்காக பார்லிமென்டில் எவ்வளவு ஆவேசமாக பேசுகிறார்' என்று நினைக்கத் தோன்றும்.ஆனால் அம்மையார் ஆவேசமாக வெடித்தது, மக்களுக்காக அல்ல; சட்ட விரோதமாக வெளிநாட்டு வங்கியில் முதலீடு செய்துள்ள தன் மருமகளுக்காக என்பது விஷயமுள்ளோருக்கு தெரியும்.மாமியாருக்கு தான் மருமகளின் மீது என்னே ஒரு கரிசனம்; அக்கறை?


பணம் பாதாளம் வரை பாயுமே!வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில் சாதாரண எளிய, நடுத்தர மக்கள், வீட்டு வரியோ, வருமான வரியோ கட்டத் தவறினாலோ, பணமின்மையால் தாமதம் செய்தாலோ, உடனடியாக அபராதம் விதிக்கப்படும். குடிநீர் குழாய், மின் இணைப்புகள் துண்டிக்கப்படும். எந்த ஒரு விளக்கத்தையும், அதிகாரிகள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.
ஆனால், பல கோடி ரூபாய்களில் புரளும் பெரு முதலாளிகள், சினிமா துறையினர் வரி ஏய்ப்பு செய்வதை, அதிகாரிகள் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ள மாட்டார்கள்.பிரபல ஜவுளி நிறுவனங்கள், 1,000 கோடி ரூபாய்க்கான வரி ஏய்ப்பு செய்துள்ளதை, வருமான வரித்துறையினர் சோதனையில் கண்டுபிடித்துள்ளனர். அந்த நிறுவனம், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக வரி செலுத்தவில்லையாம்.
வரி ஏய்ப்பு செய்தது, 1,000 கோடி ரூபாய் தானா இல்லை அதற்கும் அதிகமாகவா என்பது யாருக்குத் தெரியும்? இந்த நிறுவனம் போல, பல பெரு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்திருக்கும். அதெல்லாம் எப்போது வெளிச்சத்திற்கு வருமோ?
வருமான வரித்துறையும், எப்போதாவது சோதனை என்ற கண் துடைப்பு நாடகம் நடத்தும். நிறைய ஆவணங்களும், கணக்கில் வராத ரொக்கம், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக பரபரப்பான தகவல்களை தெரிவிக்கும். அத்துடன் அதன் வேலை
முடிந்தது. நாமும் அதைப் பற்றி மறந்து விடுவோம்.வரி ஏய்ப்பு செய்யும் கோடீஸ்வரர்கள், நாட்டின் பொருளாதாரத்திற்கு கேடு விளைவிப்போர்.

இவர்கள் செய்யும் வரி ஏய்ப்பு பணத்தில், இந்நாட்டின் பாதி பேரின் பட்டினியைப் போக்கி விடலாம். ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தலாம். நாட்டின் கடன் சுமையை பெருமளவு குறைக்கலாம். எனவே, வரி ஏய்ப்பு செய்யும் பெரு நிறுவனங்களுக்கு அபராதம் மட்டும் விதித்தால் போதாது. அவர்கள், தெரிந்தே இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்
உளனர். அவர்களுக்கு கடும் தண்டனை அளிப்பதால், நாட்டின் வளர்ச்சிக்கு உதவலாம்.ஆனால் பணம் பாதாளம் வரை பாயுமே!


ஆணின் திருமண வயதையும் உயர்த்துங்கள்!க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பெண்ணின் திருமண வயது தற்போது, 18 ஆக உள்ளது. பெரும்பாலான பெண்கள், பெற்றோரின் நிர்பந்தம் காரணமாக, திருமணத்திற்கு சம்மதிக்கின்றனர்.இதனால் கல்லுாரி படிப்பை தவற விடுகின்றனர்; சம்பாதித்து, வாழ்க்கையை சுயசார்புடன் எதிர்கொள்ள முடியாமல், ஆண்களை சார்ந்து இருக்கும் நிலையிலேயே வாழ்கின்றனர்.எனவே, ஜெயா ஜெட்லி தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி, ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் திருமண வயதை, 21 ஆக உயர்த்த வேண்டும் என்பதை, அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது.அதற்கான சட்ட திருத்த மசோதா, நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட உள்ளது.

முற்போக்கான சமூக சீர்திருத்தங்கள் உருவாக வேண்டுமெனில், பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்; அதற்கு திருமண வயதை உயர்த்துவது சாதகமாக அமையும்.இளம் வயதிலேயே திருமணமாகி கர்ப்பம் தரிக்கும் போது தாய்க்கும், குழந்தைக்கும் சத்து குறைபாடு பிரச்னைகள் ஏற்படுகின்றன; வயதை உயர்த்துவது, அந்த
பிரச்னைகளை தீர்க்கும்.அதேநேரம், ஆண்களின் திருமண வயதை, 24 ஆக உயர்த்தலாம். 21 வயதில் எந்த ஆணுக்கும் வேலை கிடைப்பதில்லை. இன்றைய சூழலில், வேலை கிடைப்பது என்பதும் குதிரைக் கொம்பாகவே உள்ளது.சுய சம்பாத்தியம் இல்லாத போது, பெற்றோரை நம்பி வாழ வேண்டிய நிலை உருவாகிறது. திருமணத்திற்கு, ஆண்களின் வயதை மூன்று ஆண்டுகள் உயர்த்தினால், படிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குள் ஏதாவது ஒரு தொழிலோ, வேலையோ ஏற்படுத்தி கொள்ள முடியும்.
சுய வருமானத்தில், தம்பதி தங்கள் வாழ்க்கையை நடத்தலாம். அரசு ஆலோசிக்குமா?

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
25-டிச-202122:39:43 IST Report Abuse
Anantharaman Srinivasan பெண்ணின் திருமண வயது 21 ஆகிவிட்டால் ஆண்களுக்கு பெண் எங்கிருந்து கிடைப்பாள்? ஒரே வயதிலா திருமணம் செய்யமுடியும். Automatically ஆண்களின் திருமண வயது தள்ளிப்போகும்..
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-டிச-202119:58:53 IST Report Abuse
D.Ambujavalli பெரிய நிறுவனங்கள் வரி ஏய்ப்பை சரிக் கட்ட வீசியெறியும் தொகையை எடுத்துக்கொண்டு அடங்குவதுதான் அவர்களுடைய நேர்மை
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
25-டிச-202112:46:08 IST Report Abuse
raja இப்போ எந்த ஆணுக்கு 21 வயசுலேயே கல்யாணம் ஆகுது...அவன் அவன் 30 வயதுக்கு மெல்லத்தான் பொண்ணு கிடைத்து கல்யாணமே நடக்குது.. மாநிலம் தாண்டி வேற பொண்ணு தேடும் நிலைமை இப்போ உள்ள ஆண்களுக்கு .. ... இதுல சட்டப்படி ஆணின் திருமண வயதை உயர்த்தணுமாம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X