டாக்கா:வங்கதேசத்தில் பயணியர் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து, 'எம்.வி., அபிஜன் 10 லான்ச்' என்ற பயணியர் கப்பல் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. சுகந்தா நதிமூன்று அடுக்குகளை உடைய இந்த கப்பலில் 800க்கும் மேற்பட்ட மக்கள் பயணித்ததாக கூறப்படுகிறது.
நாட்டின் தென்பகுதியில் உள்ள சுகந்தா நதி வழியாக நேற்று அதிகாலை 3:00 மணிக்கு இந்த கப்பல் சென்றது. அப்போது கப்பலின் இன்ஜின் அறையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவிய தால், கப்பலில் இருந்த பயணியர் அலறியடித்தபடி நதியில் குதித்தனர்.சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்தனர்.
மூன்று மணிநேர போராட்டத்திற்குப் பின், கப்பலில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் தீயணைப்புத் துறையினர் கொண்டு வந்தனர்.உயிரிழந்த நிலையில் 40 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். இதில் ஒன்பது பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
மேலும் 150க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் 72 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை கவலைக் கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விசாரணை
இதற்கிடையே மாயமான இதர பயணியரை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, ஏழு உறுப்பினர்கள் அடங்கிய குழுவை வங்கதேச அரசு அமைத்துள்ளது.விசாரணையை அடுத்த மூன்று நாட்ளுக்குள் நிறைவு செய்து, அதன் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க அந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கப்பலில், அதன் கொள்ளளவை விட அதிகமான பயணியர் பயணித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement