சிதைந்த பாகங்கள் மீட்க ஹெலிகாப்டரில் ஆய்வு

Updated : டிச 25, 2021 | Added : டிச 25, 2021 | |
Advertisement
குன்னுார்: குன்னுாரில், ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில், கனரக பாகங்களை எடுத்து செல்வது குறித்து, ஹெலிகாப்டரில் இருந்தவாறு, விமானப்படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டம், குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில், கடந்த, 8ம் தேதி ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர். அங்கு, எரிந்து சிதைந்த


குன்னுார்: குன்னுாரில், ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில், கனரக பாகங்களை எடுத்து செல்வது குறித்து, ஹெலிகாப்டரில் இருந்தவாறு, விமானப்படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.



latest tamil news




நீலகிரி மாவட்டம், குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில், கடந்த, 8ம் தேதி ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
அங்கு, எரிந்து சிதைந்த ஹெலிகாப்டரின் பாகங்கள், கோவை சூலுார் விமானப்படை தளத்துக்கு எடுத்து செல்லப்பட்டன.


latest tamil news




நேற்று காலை, கோவை விமானப்படை முகாமில் இருந்து, ஹெலிகாப்டரில் வந்த உயரதிகாரிகள், விபத்து நடந்த இடம் முதல், வெலிங்டன் ஜிம்கானா வரை, ஹெலிகாப்டரில் அமர்ந்தவாறு ஆய்வு செய்தனர்.
அப்போது, ரோட்டார் மற்றும் இரு இன்ஜின்களை, ஹெலிகாப்டர் வாயிலாக துாக்கி செல்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். விரைவில் அவை, கோவைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X