ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கம்

Updated : டிச 25, 2021 | Added : டிச 25, 2021 | கருத்துகள் (62)
Advertisement
சென்னை: பண மோசடி வழக்கில் தலைமறைவான அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகளை போலீசார் முடக்கி உள்ளனர்.தமிழகத்தில் முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் பலருக்கும் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர்
ராஜேந்திர பாலாஜி, வங்கிக்கணக்கு, முடக்கம்

சென்னை: பண மோசடி வழக்கில் தலைமறைவான அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகளை போலீசார் முடக்கி உள்ளனர்.



தமிழகத்தில் முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் பலருக்கும் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை மதுரை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் தலைமறைவானார். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு விசாரணைக்கு வரவில்லை. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீசை போலீசார் வழங்கி உள்ளனர். தலைமறைவானவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து 9 நாட்களாக தேடி வருகின்றனர்.


latest tamil news


ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததால் தலைமறைவானார். 8 தனிப்படைகள் அமைத்து கடந்த 17ம் தேதி முதல் ராஜேந்திர பாலாஜியை தேடி வருகின்றனர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இந்நிலையில் அவரது நகர்வுகளை தடுக்கும் வகையில் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.


இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகளை போலீசார் முடக்கி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,கனடா
25-டிச-202121:51:53 IST Report Abuse
அன்பு டாடியை நம்பி ஏகப்பட்டதிற்கு ஊழல் செய்துவிட்டார். டாடி காப்பாற்றவில்லையென்றதும், ஓடி ஒளிந்து கொள்கிறார்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-டிச-202121:07:57 IST Report Abuse
Kasimani Baskaran காசு வாங்கி கம்பி நீட்டியதால் பாலாஜிக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றாலும் மோசடி செய்துவிட்டார் என்று புகார் கொடுத்தவர்களும் புனிதர்கள் அல்லர். வேலை வாங்க லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள். பாலாஜிக்கு 5 ஆண்டு தண்டனை என்றால் லஞ்சம் கொடுத்து இடம் வாங்க முயன்றவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்றாண்டுகளாவது தண்டனை கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
25-டிச-202120:52:11 IST Report Abuse
Nagarajan D எந்த கட்சிக்காரன் தவறு செய்தாலும் அவனை தண்டிக்கவேண்டும்... இந்த தண்டனை மற்ற MLA MP களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும்... மிக கடுமையான தண்டனை தரப்படவேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X