புதுடில்லி: 2021-ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டில், நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. நல்லாட்சி தினத்தையொட்டி புதுடில்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா இன்று வெளியிட்டார்.
![]()
|
மற்ற பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாநிலங்கள் பின்வருமாறு:
வணிகம் & தொழில்கள் துறையில் ஆந்திராவும், மனிதவள மேம்பாட்டு துறையில் தெலங்கானாவும், பொது சுகாதாரத்தில் கேரளாவும்,பஞ்சாப்; பொது சுகாதாரம் - கேரளா; பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள்;கோவா; பொருளாதார நிர்வாகம்; குஜராத்; சமூக நலன் & மேம்பாடு ஆகிய துறைகளில் முதலிடம் வகிக்கின்றன.
![]()
|
அமித்ஷா பேசியதாவது: கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசு வழங்கிவரும் நல்லாட்சிக்காக மக்கள் நீண்ட காலமாகக் காத்திருந்தது. மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியின் பலன்களை மக்கள் பெறத் தொடங்கியதால், 2014 முதல் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை, ஏனெனில் அது தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் தான். இவ்வாறு அமித்ஷா பேசினார்.