சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

'காபி கேன்' முதலீடு பற்றி தெரியுமா?

Added : டிச 25, 2021 | கருத்துகள் (1)
Advertisement
பங்குச் சந்தை ஆலோசகர் ஜி.எஸ்.ராஜேஷ் குமார்: பழங்காலத்தில் மேற்கு அமெரிக்காவில் குடும்பங்களில் முக்கியமான பொருட்களை காபி கேன்களில் போட்டு வைக்கும் பழக்கம் இருந்தது. இந்த கேன்களைப் படுக்கை அறையில் மெத்தைக்கு அடியில் மறைத்து வைத்துவிட, அது அங்கே பல ஆண்டு காலம் இருக்கும். வங்கி நடைமுறை அதாவது, சேமிப்பு மற்றும் பாதுகாப்பு பெட்டக வசதி பிரபலமாகும் வரை இந்தப் பழக்கம் தான்

சொல்கிறார்கள்

பங்குச் சந்தை ஆலோசகர் ஜி.எஸ்.ராஜேஷ் குமார்: பழங்காலத்தில் மேற்கு அமெரிக்காவில் குடும்பங்களில் முக்கியமான பொருட்களை காபி கேன்களில் போட்டு வைக்கும் பழக்கம் இருந்தது. இந்த கேன்களைப் படுக்கை அறையில் மெத்தைக்கு அடியில் மறைத்து வைத்துவிட, அது அங்கே பல ஆண்டு காலம் இருக்கும். வங்கி நடைமுறை அதாவது, சேமிப்பு மற்றும் பாதுகாப்பு பெட்டக வசதி பிரபலமாகும் வரை இந்தப் பழக்கம் தான் அதிகம் இருந்தது.நம் ஊரில் பெண்கள் அஞ்சறைப் பெட்டி, அரிசி டப்பா, கடுகு டப்பா போன்றவற்றில் பணத்தை சேமித்து வைத்துவிட்டு, பின் அதை அவசரத் தேவைக்குப் பயன்படுத்துகிற மாதிரி தான் இதுவும். இதுமாதிரி சிறப்பாகச் செயல்படும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து விட்டு, நீண்ட காலத்துக்கு அதை வைத்திருப்பது தான், 'காபி கேன்' முதலீட்டு முறை.'காபி கேன் இன்வெஸ்டிங்' என்ற வார்த்தையை ராபர்ட் ஜி கிர்பை என்பவர், 1984ல் முதன் முதலாகப் பயன்படுத்தினார். மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படும் 'சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' முறை தான் இதுவும்.சில முன்னணி பங்குத் தரகு நிறுவனங்கள் தான் பங்குகளில் இந்த முறையில் முதலீடு செய்யும் வசதியை அளித்து வருகின்றன. இந்த வசதியில் மாதம் இத்தனை பங்குகள் என்ற முறையில் முதலீடு செய்ய முடியும். உங்களின் புரோக்கரிடம் இந்த வசதி இல்லை எனில், நீங்கள் தான் மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்குகளை வாங்கி வர வேண்டும்.இதற்காக தேர்வு செய்திருக்கும் நிறுவனப் பங்குகளில், ஆண்டுக்கு ஒரு முறை மொத்தமாக முதலீடு செய்து வரலாம். சம்பளம் தவிர, இடையில் கிடைக்கும் பணம் மற்றும் போனஸ் தொகையை இந்த முதலீட்டு முறைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். நிறுவனப் பங்குகளின் விலை இறக்கம் காணும்போதெல்லாம் வாங்கிச் சேர்த்து வந்தால், நீண்ட காலத்தில் அதிக வருமானத்தைப் பெற முடியும்.'காபி கேன் போர்ட்போலியோ' வில் சந்தை அதிக இறக்கம் கண்டிருக்கும்பட்சத்தில் அது மீண்டு வர அதிக ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். அந்த வகையில், அதிக பொறுமை காக்கக் கூடியவர்கள் மற்றும் சந்தை இறக்கத்தில் கூடுதலாக முதலீடு செய்யக் கூடியவர்களுக்குத் தான் இந்த முதலீட்டுக் கலவை ஏற்றதாக இருக்கும்.சிறந்த பங்குச் சந்தை நிபுணர்கள், பங்குத் தரகர்களின் உதவியுடன் காபி கேன் போர்ட்போலியோவை உருவாக்கிக் கொள்ள முடியும்!'யுடியூபில்' தமிழ் கற்றுத் தருகிறேன்!புற்றுநோயை புறந்தள்ளிய ஜெயஸ்ரீ முரளி: எனக்கு மார்பகத்தில், 'மூணாவது ஸ்டேஜ் கேன்சர்'னு உறுதியானதும், டாக்டரிடம் கேட்ட கேள்வி, 'நான் எத்தனை நாள் உயிரோட இருப்பேன்... என் பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்றது'ங்கிறது தான்.
'இந்த உலகத்தில் யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை. அதனால் நீங்கள் எதையும் யோசிக்க வேண்டாம். இதை விட பெரிய விஷயங்களில் இருந்து மீண்டவர்கள் இருக்காங்க'ன்னு சொன்னாங்க.'கீமோ தெரபி' 15 நாட்களுக்கு ஒருமுறை எடுக்க வேண்டும். ஒருமுறை கீமோ பண்ணினா தலையில் இருந்து கால் வரை ஊசியால் குத்தற
மாதிரி வலிக்கும்; புண்ணாயிடும். யூரின் போற இடத்துல கொப்பளங்கள் இருக்கும். வாய் சிவந்துடும். 'உடம்பு இந்த வலியை அனுபவிக்குது. அதனோட சேர்ந்து மனதும் அதை அனுபவிக்க வேண்டாம்' என புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அழத் தோன்றினால், மொத்தமா அழுது முடிச்சிட்டு வெளியே வந்திடுவேன். வலி இல்லாத நாட்களில் நிறைய படிக்கவும், என்னை நானே சுய ஆய்வு செய்து கொள்ளவும் முடிந்தது.
மொத்தத்தில், அந்த ஏழு மாதங்கள் எனக்கு நேரம் நிறைய கிடைத்தது. மீண்டு வரணும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது.குழந்தைகளுடன் வேலை செய்வது மிகவும் பிடிக்கும். எனக்கு தமிழ் ஆர்வம் அதிகம். இயல், இசை, நாடகம் வாயிலாக தமிழை குழந்தைகளுக்கு சேர்க்கணும் என நினைத்தேன். முதல்கட்டமாக, பொன்னியின் செல்வன் நாவலை குழந்தைகளுக்கு யு டியூப்ல வாசிக்க
ஆரம்பித்தேன். குழந்தைகளுக்கு பொன்னியின் செல்வன் புரியுமான்னு கேட்டவங்க, இந்த முயற்சியைப் பார்த்து ஆச்சரியப்படுறாங்க. குழந்தைங்க அவ்வளவு அழகா உள்வாங்கிக்கிறதையும், மொழியைக் கற்றுக் கொள்வதையும் பார்க்க முடியுது.
அடுத்து, பாரதியார் பாடல்கள், அவ்வையார், கம்பர், திருமூலர் பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுக்கணும்ன்னு ஒரு திட்டமும் இருக்கு. தமிழில் குழந்தைகளுக்கான அறிவியல் புத்தகங்கள் பெருசா இல்லை. அதற்கான ஒரு புத்தகம் எழுதற முயற்சியும் போயிட்டுஇருக்கு.'மற்ற மொழிகளை எல்லாம் தேடிப் போய் கற்றுக் கொள்ளும் பிள்ளைகள், தமிழ் கற்றுக் கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனரே... இதே நிலை நீடித்தால், பேச்சில் கூட தமிழ் இல்லாம் போயிடுமோ' என பயம் வந்தது.
கண்ணுக்கு முன்னாடியே தமிழ் மொழி அழிவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான், இந்த முயற்சிகளை எல்லாம் செய்து வருகிறேன்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
26-டிச-202115:27:34 IST Report Abuse
மலரின் மகள் பரம்பரை சொத்து போன்றது. தலைமுறைகளுக்கு சொத்து சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறந்த பங்குகளை தேர்ந்தெடுத்து சேமிக்கவேண்டும். காபிகேன் முதலீடுகளை பற்றி விளக்கம் தந்த நிபுணர் சில பங்குகளை பரிந்துரை செய்திருக்கலாம். பொதுவாக முதலீட்டு ஆலோசகர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்பது சரியாகாது. அவர்கள் தங்கள் விரும்பிய தனியார் நிறுவனம் பங்குகளை மட்டுமே சொல்வர். அரசுத்துறை சார்ந்த பங்குகளை தள்ளியே விடுவார். அது எனோ தெரியவில்லை அவர்கள் அரசு தரும் பங்குகளுக்கு எதிராகவே இருப்பர். அரசுத்துறை பங்குகள் தான் தலைமுறையை தலைமுறையாக நிலைத்து நிற்கும் தனியார் துறைகளில் ஒரு சில பெரிய குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் கம்பனிகளின் சில நிறுவனங்களை தவிர மற்றவைகள் நிலைத்திருக்காது. டாட்டா நிறுவனம், டீ சி எஸ், குறிப்பிடலாம். அரசுத்துறை நிறுவனமான எச் எ எல், பி இ எல், செயில், பி டி சி, ஆர் ஈ சி, எஸ் பி ஐ, சிறந்தவை என்றாலும் பங்குச்சந்தை ஆலோசகர்கள் அந்த பக்கம் பார்க்கமாட்டார்கள். ஒருதலை பட்சமோ அல்லது பாராமுகமோ? நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X