ஏலத்திற்கு வரும் நிரவ் மோடியின் ரூ 1000 கோடி சொத்துக்கள்

Updated : டிச 26, 2021 | Added : டிச 26, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
மும்பை-வங்கி மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஏலம் விடுவதற்காக அமலாக்கத் துறை அவற்றை விடுவித்துள்ளது. வைர வியாபாரிபோலி ஆவணங்கள் வாயிலாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, வைர வியாபாரி நிரவ் மோடி மீது, சி.பி.ஐ., அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்துள்ளன. கடந்த, 2017ல் வெளிநாடு

மும்பை-வங்கி மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஏலம் விடுவதற்காக அமலாக்கத் துறை அவற்றை விடுவித்துள்ளது.



latest tamil news


வைர வியாபாரிபோலி ஆவணங்கள் வாயிலாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, வைர வியாபாரி நிரவ் மோடி மீது, சி.பி.ஐ., அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்துள்ளன. கடந்த, 2017ல் வெளிநாடு தப்பிய அவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்தி வருவதற்கான வழக்கும் நடந்து வருகிறது.நிரவ் மோடிக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை ஏற்கனவே முடக்கி வைத்துள்ளது.

கடனை ஈடு செய்யும் வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு அந்த சொத்துக்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை ஏலம் விடும் நடவடிக்கையில் வங்கி ஈடுபட்டுஉள்ளது.அதன்படி தற்போது 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை விடுவித்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் காலா கோடா பகுதியில் உள்ள பாரம்பரியமிக்க 'ரிதம் ஹவுஸ்' என்ற இசைக் கருவிகள் விற்கும் நிலையம் செயல்படும் கட்டடம் உள்ளிட்டவை அதில் அடங்கும்.


latest tamil news




விருப்பம்



கடந்த, 2017ல் 33 கோடி ரூபாய் கொடுத்து ரிதம் ஹவுஸ் கட்டடத்தை நிரவ் மோடி வாங்கியுள்ளார். மிக முக்கியமான பகுதியில் அமைந்துள்ள இந்த பாரம்பரியமிக்க கட்டடத்தை வாங்குவதற்கு பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஏற்கனவே பேசியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
26-டிச-202111:39:03 IST Report Abuse
sankaseshan ஊழலில் மாட்டிக்கொண்ட Vasan eye care இன்னமும் நடந்து கொண்டிருப்பதை பார்த்தால் தெரியும் எப்படிப்பட்ட கில்லாடி என்று தந்தை 8 அடிப்பாய்ந்தால் பிள்ளை 18 அடிபாய்வான்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
26-டிச-202110:08:46 IST Report Abuse
duruvasar பசியின் பசி எப்போது அடங்கும் ?
Rate this:
Cancel
26-டிச-202107:58:58 IST Report Abuse
அப்புசாமி மனுஷன் 11000 கோடி ஆட்டையப் போட்டுட்டு, பிரதமருக்குத் தெரியாமலேயே பிரதமர் கூடவே டாவோசுக்குப் போய், அப்பிடியே இங்கிலாந்திற்குப் போயிட்டாரு. அவரோட 1000 கோடி சொத்துக்களை ஏலம் உட்டு, கஜானாவுல சேத்துருங்க. மீதியை வாராக்கடன் வங்கில சேத்துருங்க. நீரவ் மிடி மாதிரி இன்னும் நிறைய பேரு கடனுக்காக வெயிட்டிங். நமக்கு கார்பரேட்க்ள் நலன் தானே முக்கியம்.
Rate this:
P.MANIMARAN - keeranur,இந்தியா
26-டிச-202108:14:15 IST Report Abuse
P.MANIMARANஇந்தியா நேர்மையான நாடு அல்ல . இங்குள்ள அரசியல் வாதிகள் திருடர்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X