அம்பாறை:இலங்கை திருக்கோயில் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டதில் 4 அதிகாரிகள் பலியாயினர்.
இலங்கையின் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் போலீஸ் ஸ்டேஷன் சார்ஜென்ட் குமார. நேற்று முன்தினம் நள்ளிரவில் இவருக்கும் அங்குள்ள அதிகாரிகளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே புரபுத்த, நவீனன், துஷார ஆகிய மூவர் உயிரிழந்தனர்.
தகவலறிந்த உயர் அதிகாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தபோது அவர் வாகனம் மீதும் குமார துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காதர் என்ற அதிகாரி பலத்த காயமடைந்தார். மருத்துவமனை செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார்.போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பதிகாரி தெஹிகம, டிரைவர் குமார், சார்ஜன்ட் கந்தசாமி ஆகியோர் காயமடைந்து சிசிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய குமார, போலீஸ் ஸ்டேஷனில் இருந்த இரண்டு துப்பாக்கிகள், 19 குண்டு கூடுகளை எடுத்து தப்பிச்சென்றார். பின்னர் மொனராகல மாவட்டம் எதிமல போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். எதிமல அவரின் சொந்த ஊர் என போலீசார் தெரிவித்தனர். அவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதா என தீவிர விசாரணை நடந்து வருகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement