நன்கொடை இயக்கம்: பா.ஜ., அறிவிப்பு

Updated : டிச 26, 2021 | Added : டிச 26, 2021 | கருத்துகள் (19)
Advertisement
புதுடில்லி-கட்சியின் வாயிலாக நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், சிறிய அளவிலான நன்கொடை இயக்கத்துக்கு ஆதரவு தரும்படி, மத்தியில் ஆளும் பா.ஜ., கோரியுள்ளது. பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் நலன், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடிப்படை கொள்கையாக பா.ஜ., கொண்டுள்ளது. கட்சியை வலுப்படுத்துவதன் வாயிலாக நம் நாட்டை

புதுடில்லி-கட்சியின் வாயிலாக நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், சிறிய அளவிலான நன்கொடை இயக்கத்துக்கு ஆதரவு தரும்படி, மத்தியில் ஆளும் பா.ஜ., கோரியுள்ளது.



latest tamil news


பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் நலன், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடிப்படை கொள்கையாக பா.ஜ., கொண்டுள்ளது. கட்சியை வலுப்படுத்துவதன் வாயிலாக நம் நாட்டை பலப்படுத்த முடியும்.நாட்டு மக்களுடன் நம் கட்சி நிர்வாகிகள் தொடர்பில் இருக்கும் வகையில் சிறிய அளவிலான நன்கொடை இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இதில், 5, 50, 100, 500 அல்லது 1,000 ரூபாய் அளவுக்கு நன்கொடை அளிக்கலாம்.'நமோ' என்ற மொபைல் போன் செயலி மூலம் இந்த நன்கொடையை அளிக்கலாம். உலகின் மிகப் பெரிய தேசியவாத இயக்கத்தை வலுப்படுத்த அனைவரது ஆசியையும் கேட்கிறோம்.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளான, டிச., 25ல் துவங்கி, கட்சி உருவாக காரணமாக இருந்த தீன் தயாள் உபாத்யாய் நினைவு நாளான பிப்., 11ம் தேதி வரை இந்த இயக்கம் நடக்கும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

கட்சிக்கு தான் அளித்த நன்கொடை விபரத்தை சமூக வலைதளத்தில் நட்டா வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கட்சிக்கு நன்கொடை அளித்த விபரத்தை பகிர்ந்துஉள்ளனர். இதன்படி, பிரதமர் மோடி 1,000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
26-டிச-202115:49:19 IST Report Abuse
Barakat Ali பிஜேபியின் மாஜி தலைவர் அமித் ஷா கூட பெரிய மனசு பண்ணி ஆயிரம் ஊவா கொடுத்திருக்கார் அவரால் முடிஞ்சது அதுதான்
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
26-டிச-202113:32:31 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     இதே கட்சி கம்யூனிஸ்ட் எப்பயோ தகரம் கண்டுபித்தார்களோ அப்போ உண்டி தூக்கியவர்கள் என்று கிண்டல் செய்து விட்டு அதே உண்டியலை ஏழை கட்சி தொடங்கி இருக்கு
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
26-டிச-202113:06:17 IST Report Abuse
Dhurvesh சின்ராசு உண்டி குலுக்க தொடங்கிவிட்டார்
Rate this:
26-டிச-202113:31:13 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்ஒரு ரூபா சம்பளம் வாங்கிய முதல்வரையே பார்த்தவர்கள் நாங்கள்.. ஆயிரம் ரூபா நன்கொடை அறிவிப்பு எங்களை அசைத்துவிட்டு முடியாது ..அதையெல்லாம் வடக்கண்களிடம் வைத்துக்கொள்ளுங்கள் ஐயா ...உங்களை ஹைகோர்ட்டாகவே பார்க்கிறோம் நாங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X