சீன வர்த்தக சாம்ராஜ்யம் சரிகிறது: இந்திய ஆடை ஏற்றுமதி சிறக்கும்

Updated : டிச 26, 2021 | Added : டிச 26, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
திருப்பூர்:அமெரிக்காவின் அதிரடியால், சீனாவின் ஆடை வர்த்தக சாம்ராஜ்யம் சரிகிறது; இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி துறைக்கு, உலகளாவிய சந்தை வாய்ப்புக்கள் கூடிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச ஆயத்த ஆடை ஏற்றுமதியில், காலம் காலமாக சீனா கோலோச்சி வருகிறது. கொரோனா பரவலுக்குப்பின், உலக நாடுகள் மத்தியில் சீனாவின் மதிப்பு குறைந்துள்ளது. பெரும்பாலான நாடுகள், சீனாவுக்கு
சீனா, வர்த்தக சாம்ராஜ்யம், சரிகிறது, இந்தியா, ஆடை ஏற்றுமதி,

திருப்பூர்:அமெரிக்காவின் அதிரடியால், சீனாவின் ஆடை வர்த்தக சாம்ராஜ்யம் சரிகிறது; இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி துறைக்கு, உலகளாவிய சந்தை வாய்ப்புக்கள் கூடிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச ஆயத்த ஆடை ஏற்றுமதியில், காலம் காலமாக சீனா கோலோச்சி வருகிறது. கொரோனா பரவலுக்குப்பின், உலக நாடுகள் மத்தியில் சீனாவின் மதிப்பு குறைந்துள்ளது. பெரும்பாலான நாடுகள், சீனாவுக்கு மாற்றாக, இந்தியா, வியட்நாம், வங்கதேசம் போன்ற மற்ற நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை அளிக்கத் துவங்கிவிட்டன. இந்நிலையில், சீனாவின் சின்ஜியான் மாகாணத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கும் முடிவுக்கு, தற்போது அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.சீனாவின் உள்ளூர் தேவைக்கான பருத்தியில், 87 சதவீதம் சின்ஜியானில் உற்பத்தியாகிறது. அமெரிக்காவின் அதிரடியால், சீனாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக சாம்ராஜ்யம் சரியும் நிலை உருவகியுள்ளது.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் குமார் துரைசாமி கூறியதாவது:தற்போது, சின்ஜியானில் இருந்து அனைத்து பொருட்கள் இறக்குமதிக்கு தடைவிதிக்கும் முடிவுக்கு, அமெரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சில ஐரோப்பிய நாடுகளும், சீன பொருட்கள் புறக்கணிப்பை படிப்படியாக செயல்படுத்தி வருகின்றன.கொரோனா பரவலை தொடர்ந்து, மனித உரிமை மீறல்கள், உலக நாடுகள் மத்தியில் சீன எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. சர்வதேச வர்த்தகர்கள், சீன நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்பு ஆர்டர் வழங்குவதை குறைத்து விடுவர்.மூலப்பொருள் தேவைக்கு பிற நாடுகளையே சார்ந்திருக்கும் நிலை உருவாவதால், சீனாவின் ஆடை தயாரிப்பு செலவினம் அதிகரிக்கும்; இதனால், அந்நாட்டின் போட்டி திறன் குறையும்.


latest tamil news



இது, இந்தியா, வியட்நாம் நாடுகளின் ஆடை ஏற்றுமதி துறைக்கு அதிக வர்த்தக வாய்ப்புகளை பெற்றுத்தரும். மத்திய அரசு, பருத்தி, நுால் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும். மூலப்பொருட்களுக்கு பதில் ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்வதன் வாயிலாக, நாட்டுக்கு அன்னிய செலாவணி அதிகரிக்கும்; வேலை வாய்ப்பும் பெருகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
27-டிச-202101:30:17 IST Report Abuse
Charles தரத்தையும், குறித்த நேரத்தில் பொருட்களை விநியோகம் செய்வதிலும், நம்பிக்கை காப்பதிலும், தவறாமல் வணிகத்தில் நம் மக்கள் ஈடுபடவேண்டும். தொழிலாளிகளை மறந்துவிடாதீர்கள்
Rate this:
Cancel
Prakash - Chennai,இந்தியா
26-டிச-202123:27:47 IST Report Abuse
Prakash இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் சீனாவுக்கு ஒன்றும் புதிதல்ல. மிக முக்கியமான விடயம் இதில் என்னவெனில்,இந்தியாவை விட வியட்நாம், தாய்லாந்து, பங்களாதேஷ், இந்தோனேக்ஷியா நாடுகள் எல்லாம், மிக மிக மலிவான விலையில் ஆடைகள், மற்றும் இதர பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன. இந்தியாவின் உள் நாட்டு வரிகளும், ஊழலும், லஞ்சமும் அடக்க விலையை மிகவும் கூட்டி விடுவதால், ஏற்றுமதியில் முந்தவும், சிறக்கவும் அதிக வாய்ப்பில்லை என நான் நம்புகிறேன்.
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
26-டிச-202119:28:11 IST Report Abuse
Sai அது தெரிஞ்சுதானே ஜவுளிக்கு GST யை ஏத்திட்டாரு மோடி வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிவாறு
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
27-டிச-202107:58:28 IST Report Abuse
Barakat Aliஅரசின் வருமானத்தைப் பெருக்க இது அவசியமே கூடுதல் வருமானம் ஜவுளித் தொழிலை முன்னேற்றவே செலவழிக்கப்படும் வெறுப்பு விதைகளை விதைக்க வேண்டாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X