செய்திகள் சில வரிகளில்

Added : டிச 26, 2021
Advertisement
'கேமரா'வுடன் பாய்ந்த ராக்கெட்பீஜிங்: நம் அண்டை நாடான சீனா, விண்வெளி துறையை மேம்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் விண்வெளியில் தெளிவான புகைப்படங்களை எடுக்கும் உயர் ரக, 'கேமரா'வுடன் கூடிய 'ஜியுவான் - 1 - 02 இ' செயற்கைக்கோளை சீன தேசிய விண்வெளி நிறுவனம் நேற்று விண்ணில் செலுத்தியது. ஷான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் ஏவு தளத்தில் இருந்து 'லாங்

'கேமரா'வுடன் பாய்ந்த ராக்கெட்



பீஜிங்: நம் அண்டை நாடான சீனா, விண்வெளி துறையை மேம்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் விண்வெளியில் தெளிவான புகைப்படங்களை எடுக்கும் உயர் ரக, 'கேமரா'வுடன் கூடிய 'ஜியுவான் - 1 - 02 இ' செயற்கைக்கோளை சீன தேசிய விண்வெளி நிறுவனம் நேற்று விண்ணில் செலுத்தியது. ஷான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் ஏவு தளத்தில் இருந்து 'லாங் மார்ச் 4சி' ரக ராக்கெட் வாயிலாக இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

கோட்டையில் நுழைந்தவர் கைது

லண்டன்: கொரோனா அச்சுறுத்தல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, சாண்டிரிங்காம் எஸ்டேட் பகுதியில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்கவில்லை. மாறாக விண்ட்ஸர் கோட்டையில், மகனும், இளவரசருமான சார்லஸ் மற்றும் மருமகள் கமிலாவுடன் அவர் கொண்டாடினார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மர்ம நபர் விண்ட்ஸர் கோட்டைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தார். பாதுகாவலர்கள் அவரை கைது செய்தனர்; அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

கரை ஒதுங்கிய 27 உடல்கள்

கெய்ரோ: ஆப்ரிக்க நாடான லிபியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏராளமானோர் அகதிகளாக செல்கின்றனர். அப்படி கடல்வழியாக செல்லும் மக்கள், விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இந்நிலையில் லிபியாவின் கோம்ஸ் பகுதியில் நேற்று மத்திய தரைக்கடலின் கரையோரம் ஒரு குழந்தை உட்பட 27 பேரின் உடல்கள் கரை ஒதுங்கின. இவர்களை தவிர, மூன்று அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X