சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

சசிகலாவின் துாது; புறக்கணிக்கும் பிரபலங்கள்!

Updated : டிச 28, 2021 | Added : டிச 26, 2021 | கருத்துகள் (2)
Advertisement
நாயர் கொடுத்த இஞ்சி டீ, நண்பர்களுக்கு இதமாக இருந்தது.''முதல்வர் ஸ்டாலின் மேல, விவசாயிகள் அதிருப்தியில இருக்காவ வே...'' என்றபடியே முதல் தகவலுக்கு வந்தார், அண்ணாச்சி.''ஏனுங்க, அப்படி அவர் என்ன செஞ்சாருங்கோ...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''கருணாநிதி மகன்களில் ஒருவரான தமிழரசுவின் மாமியார் சமீபத்துல காலமாகிட்டார்... அவருக்கு அஞ்சலி செலுத்த, சென்னையில இருந்து தனி
 டீ கடை பெஞ்ச்

நாயர் கொடுத்த இஞ்சி டீ, நண்பர்களுக்கு இதமாக இருந்தது.''முதல்வர் ஸ்டாலின் மேல, விவசாயிகள் அதிருப்தியில இருக்காவ வே...'' என்றபடியே முதல் தகவலுக்கு வந்தார், அண்ணாச்சி.''ஏனுங்க, அப்படி அவர் என்ன செஞ்சாருங்கோ...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''கருணாநிதி மகன்களில் ஒருவரான தமிழரசுவின் மாமியார் சமீபத்துல காலமாகிட்டார்... அவருக்கு அஞ்சலி செலுத்த, சென்னையில இருந்து தனி விமானத்துல கோவைக்கு முதல்வர் ஸ்டாலின் தன் குடும்பத்தோடு போயிருந்தார் வே...''அன்னைக்கு தான், விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவோட நினைவு நாள்... வையம்பாளையத்துல இருக்குற நினைவு மண்டபத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வந்து, அஞ்சலி செலுத்துனாவ வே...''தி.மு.க., தரப்புல, அமைச்சர் செந்தில்பாலாஜி போயிருந்தாரு... இருந்தாலும், கோவையில வடவள்ளி வரைக்கும் வந்த முதல்வர் ஸ்டாலின், 20 நிமிஷ பயணத்துல, நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்துக்கும் வந்துட்டு போயிருக்கலாமேன்னு விவசாயிகள் நினைக்கிறாவ வே...'' என விளக்கினார், அண்ணாச்சி.''அது சரி... நாராயணசாமி நாயுடு யாருன்னு, தற்போதைய தி.மு.க.,வினருக்கு தெரியுமா ஓய்...'' என குப்பண்ணா கேட்கவும், நண்பர்கள் புன்னகைத்தனர்.''எப்படியெல்லாம் லஞ்சம் வாங்குறாங்க பா...'' என்றபடியே அடுத்த தகவலை சொல்ல ஆரம்பித்தார், அன்வர்பாய்...''கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருல இருக்குற குடிசை மாற்று வாரிய அலுவலகத்துல, பொது மக்கள் வீடு கேட்டு விண்ணப்பம் வழங்குறாங்க... அவங்ககிட்ட, புரோக்கர்கள் ஒரு விண்ணப்பத்துக்கு 1,000 ரூபாய்ன்னு வசூல் பண்ணுறாங்க பா...''அந்த விண்ணப்பத்தோட மனுவை, முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்ப சொல்லுறாங்க... முதல்வர் அலுவலகத்துக்கு மனு அனுப்பி, மொபைல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தவுடன், 10 ஆயிரம் ரூபாய் வேற வசூல் பண்ணுறாங்க பா...''வீட்டுச்சாவி உங்கள் கைக்கு வர்றப்போ மேலும், 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கணுமுன்னு புரோக்கர் வழியாக, அதிகாரிகள் இப்படி, 'அன்பாக' வசூலிக்கிறாங்க பா...''முதல்வர் தனிப்பிரிவிற்கு அனுப்பும் மனுவையே, லஞ்சம் வாங்குற வழியாக மாற்றிய, கில்லாடி அதிகாரிகள் மீது யாராவது நடவடிக்கை எடுப்பாங்களா பா...'' என முடித்தார், அன்வர்பாய்.''சசிகலாவின் துாதை புறக்கணிக்கிறாங்க...'' என கடைசி தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.''என்னன்னு வெவரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.''மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, பெங்களூரு சிறையில இருந்து விடுதலையானதும், 'அ.தி.மு.க.,வை கைப்பற்றிடலாம்'னு நினைச்சாங்க...''ஆனால், அவங்க நெனச்சது நடக்கலைங்க... அ.தி.மு.க.,வை சேர்ந்த ஒரு மாவட்ட செயலர் கூட சசிகலாவை சந்திக்கலைங்க...''ஆட்சியை இழந்த அப்புறமாவது, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலரும் தம்மிடம் வருவாங்கனு சசிகலா எதிர்பார்த்தாங்க... அப்போதும் யாரும் வரலைங்க...''இதனால், அ.தி.மு.க.,வுல தன்னை சேர்க்க சிபாரிசு செய்ய கோரி, பா.ஜ., ஆதரவாளர்களை சசிகலா தரப்புல அணுகுறாங்க...
நடிகர் ரஜினியை சமீபத்தில் சசிகலா சந்திச்சதுக்கு இதுவும் ஒரு காரணமுங்க...''ரஜினியை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களை சந்திக்க, சசிகலா திட்டமிட்டு துாது அனுப்பி இருக்காங்க... ஆனால் பலரும், அவரை சந்திக்க விரும்பலையாமுங்க...'' என, விளக்கினார் அந்தோணிசாமி. நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
27-டிச-202120:02:58 IST Report Abuse
D.Ambujavalli விவசாய தலைவரையெல்லாமா நினைவில் வைத்துக்கொள்வார்கள்? அண்ணா வையே ஓரம்கட்டியாயிற்று, குடும்பம்தான் முக்கியம் இல்லையா ?
Rate this:
Cancel
Chennaivaasi - New York,யூ.எஸ்.ஏ
27-டிச-202104:20:18 IST Report Abuse
Chennaivaasi திருடியை சந்திக்க யாராவது விரும்புவார்களா அதிமுகவில் சேர விரும்புவது மக்களுக்கு சேவை செய்யவா? மீண்டும் கொள்ளை அடிக்கத்தானே. அல்லது ஏற்கெனவே ஊரை கொள்ளை அடித்து சேர்த்து வைத்திருக்கும் பினாமி சொத்துக்களை திரும்பக்கொடுக்க மனமில்லாதவர்களை மிரட்டி பணியவைக்கத்தானே. அவனுடைய அரசியல் வாழ்வு அஸ்தமித்து விட்டது. எட்டாத பழத்துக்கு கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறாள் இந்த மாபெரும் கொள்ளைக்காரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X