சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : டிச 26, 2021 | கருத்துகள் (2)
Advertisement
தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நகரில் நடந்த ஹிந்து ஆன்மிக மாநாட்டில் பேசியவர்கள், இந்திய இஸ்லாமியருக்கு எதிராக பகிரங்கமாக பேசியிருப்பது கவலையளிக்கிறது. வன்முறையை துாண்டிவிடும் பேச்சுகளை பிரதமர் கடுமையாக கண்டிக்க வேண்டும்.உண்மையான ஹிந்து ஆன்மிக மாநாடாக இருந்திருந்தால், அவ்வாறு யாரும் பேசி
 பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நகரில் நடந்த ஹிந்து ஆன்மிக மாநாட்டில் பேசியவர்கள், இந்திய இஸ்லாமியருக்கு எதிராக பகிரங்கமாக பேசியிருப்பது கவலையளிக்கிறது. வன்முறையை துாண்டிவிடும் பேச்சுகளை பிரதமர் கடுமையாக கண்டிக்க வேண்டும்.
உண்மையான ஹிந்து ஆன்மிக மாநாடாக இருந்திருந்தால், அவ்வாறு யாரும் பேசி இருக்க மாட்டார்கள். எனினும், வன்முறையை யார் துாண்டினாலும் கண்டிக்கவே வேண்டும்!
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மண்ட் பேட்டி: 'ஜாக்டோ - ஜியோ போராட்ட காலங்களில் இடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும்; இடமாறுதல் உத்தரவுகள் முழுமையாக ரத்து செய்யப்படும்' என, தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வெளியிடப்பட்ட அரசாணையில் இதுபற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
ஆட்சிக்கு வருவதற்காக அப்படி, இப்படி சொல்லத் தான் செய்வர்... அதை நம்பி ஓட்டளித்து, இப்போது ஏமாந்து விட்டீர்கள் போல இருக்கிறதே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: தி.மு.க., அரசால் வழக்கு தொடரப்பட்டு உள்ள, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உறுதுணையாக இருப்போம். பிரச்னை என வரும்போது கை கழுவும் கட்சியல்ல, அ.தி.மு.க.,
அவருக்கு இப்போது ஆதரவாக இருந்தால் தான், அடுத்து, உங்களை போன்றவர்கள் சிக்கும் போது, ஆதரவு கிடைக்கும் என்ற எண்ணமா?
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன் பேட்டி: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சம்பாதித்த பணத்தை எல்லாம், தமிழக மக்களுக்காக வழங்குவேன் என்ற சபதத்தை நிறைவேற்றி சென்றார். ஆனால், தி.மு.க., அப்படியில்லை. லஞ்சம், லாவண்யம், ஊழலில் திளைக்கும், தி.மு.க., ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டுவோம்.
எம்.ஜி.ஆர்., அப்படி செய்ததால் தான், தமிழகமே அவரை இன்னமும் அன்புடன் நினைவு கூர்கிறது. தி.மு.க., அப்படியில்லை என்பதை இன்னமும் அறியாமலா இருக்கிறீர்கள்?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு: கடந்த 1972ல், கருணாநிதியின் தி.மு.க.,வை அழிக்க வேண்டும் என்பதற்காக, எம்.ஜி.ஆர்., சபதம் எடுத்து, அ.தி.மு.க.,வை தோற்றுவித்தார். 50 ஆண்டுகள் ஆகியும் எங்கள் கட்சியினர் கட்டுக்கோப்பாக கொள்கை பிடிப்புடன் உள்ளனர்.
அப்படியா... 50 ஆண்டுகள் ஆன பின்னும், தி.மு.க.,வையும், அதன் முன்னணி தலைவர்களையும், அ.தி.மு.க.,வால் ஒன்றும் செய்ய முடியவில்லையே அது ஏன் என யோசித்தீர்களா?

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
27-டிச-202123:40:36 IST Report Abuse
Bhaskaran அன்பை போதித்த மதமான கிறிஸ்தவத்தில் இருக்கும் போராளிகள் ஹிந்து மதத்தை விமர்சிப்பது வத்திக்கான் மாதாஜியின் கொத்தடிமை அல்போன்ஸ் கவனத்தில் வராது
Rate this:
Cancel
ksethuramalingam - Tirupur,இந்தியா
27-டிச-202107:42:17 IST Report Abuse
ksethuramalingam பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: வன்முறையை தூண்டும் விதமாக யார் பேசினாலும் தப்பு தான். தமிழ் நாட்டில் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் திக காரர்கள் ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாகவோ ஆபாசமாகவோ பேசுகிறார்கள் அப்போது பீட்டர் அல்போன்ஸ்அவர்களை கண்டித்து எந்த அறிக்கையும் விடுவதில்லை ஏன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X