மேலும் 100 பேருக்கு 'ஒமைக்ரான்' அறிகுறி:: அமைச்சர் சுப்பிரமணியன் 'பகீர்'

Updated : டிச 27, 2021 | Added : டிச 27, 2021 | கருத்துகள் (4)
Advertisement
சென்னை-''தமிழகத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 34 பேருடன் தொடர்பில் இருந்த, 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று அறிகுறி கண்டறியப் பட்டுள்ளது,'' என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை கிண்டி மடுவங்கரையில், 16வது மெகா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின், அவர் கூறியதாவது: தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக

சென்னை-''தமிழகத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 34 பேருடன் தொடர்பில் இருந்த, 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று அறிகுறி கண்டறியப் பட்டுள்ளது,'' என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.latest tamil news


சென்னை கிண்டி மடுவங்கரையில், 16வது மெகா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின், அவர் கூறியதாவது: தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 8.14 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில், 12 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்; 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த 100க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப் பட்டுள்ளது. அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு நலமுடன் உள்ளனர்.

மத்திய அரசு அறிவித்தபடி, ஜனவரி 3ல் இருந்து, 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் 33.2 லட்சம் பேர், 15 முதல் 18 வயதுக்குள் உள்ளவர்கள். அவர்களுக்கு பள்ளிகளுக்கே சென்றும், முகாம்கள் வாயிலாகவும் தடுப்பூசி போடப்படும்.தமிழகத்தில் உள்ள 9.78 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி, வரும் 10ம் தேதி துவங்கும். அதில், ஐந்து லட்சம் சுகாதார பணியாளர்களும் அடக்கம். தமிழகத்தில், 95 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்கள் விரைந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். விரைவில் 2,400 சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒப்பந்த பணியாளர்களின் பணிக்காலம் வரும், 31ம் தேதி முடிய உள்ளது.

ஆனால், மார்ச் 31 வரை யாரையும் விடுவிக்க கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.7 நாட்கள் தனிமை கட்டாயம்! சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை சர்வதேச விமான நிலையங்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள கடிதம்:தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால், தடுப்புக்கு தேவையான நடவடிக்கைகளை, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமான நிலையங்கள் வழங்க வேண்டும்.


latest tamil news


அதிகம் பாதிக்காத நாடுகளில் இருந்து வரும் பயணியரில், 10 சதவீதம் பேரை அடையாளம் கண்டு, விமான நிலையத்தில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.மேலும், அதிகம் பாதித்த நாடுகளில் இருந்து வருவோர் மட்டுமின்றி, அதிகம் பாதிக்காத நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணியரும், ஏழு நாட்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்பதையும், பயணியருக்கு தெரிவிக்க வேண்டும். இதன் வாயிலாக, உடனடியாக ஒமைக்ரான் பரவலை தடுக்க முடியும். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-டிச-202111:23:02 IST Report Abuse
ஆரூர் ரங் அரசின் SIDCO நிலத்தை ஆட்டைய😡 போட்ட திருடனை இந்த ஒமிக்ரான் விட்டு வைத்துள்ளதே
Rate this:
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
27-டிச-202104:29:48 IST Report Abuse
Kundalakesi How govt guarantees that these travelers observe 7 days quarantine
Rate this:
Cancel
27-டிச-202104:28:47 IST Report Abuse
ராஜா நியூ இயர் முடியட்டும் 100 என்பது 10000 ஆக மாறும். விடியல் அரசின் எஜமான விசுவாசம் புல்லரிக்க வைக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X