கொரோனா அதிகரிப்பு கவலையில் சீனா

Added : டிச 27, 2021 | |
Advertisement
பீஜிங்-நம் அண்டை நாடான சீனாவில் பிப்ரவரியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், சமீபகாலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருவது, அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் பிப்., 4ல் துவங்கி, 20 வரை சீனாவின் பீஜிங் நகரில் நடக்க உள்ளது. இந்நிலையில் சீனாவின் பல பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சர்வதேச பயணக்
கோவிட், பரவல், சீனா, கவலை

பீஜிங்-நம் அண்டை நாடான சீனாவில் பிப்ரவரியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், சமீபகாலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருவது, அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் பிப்., 4ல் துவங்கி, 20 வரை சீனாவின் பீஜிங் நகரில் நடக்க உள்ளது. இந்நிலையில் சீனாவின் பல பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள் விதித்து நிலையை கட்டுக்குள் வைத்திருந்தபோதும், தொற்று அதிகரிப்பது சீன அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்திஉள்ளது.

இது குறித்து சீன நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டு உள்ள அறிக்கை: சமீபத்தில் 206 பேருக்கு கொரோனா தொற்றும், தியாஜின் நகரில் ஒரு நபருக்கு ஒமைக்ரான் தொற்றும் உறுதி செய்யப்பட்டது. நாடு முழுதும் 2,011 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X