சாலை, தண்டவாளத்தில் இயங்கும் வாகனம் அறிமுகம்

Updated : டிச 27, 2021 | Added : டிச 27, 2021 | கருத்துகள் (7)
Advertisement
டோக்கியோ:கிழக்காசிய நாடான ஜப்பானில் சாலை மற்றும் தண்டவாளம் ஆகியவற்றில் இயங்கும் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஜப்பான் நாட்டின் கையோ நகரில், சாலை மற்றும் தண்டவாளத்தில் இயங்கும் வாகனம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாகனம் மினி பஸ் வடிவத்தில் உள்ளது. இது சாலையில் செல்லும் போது டயர் வாயிலாக செல்கிறது. தண்டவாளத்தில் செல்லும் போது டயர்கள் மேலே

டோக்கியோ:கிழக்காசிய நாடான ஜப்பானில் சாலை மற்றும் தண்டவாளம் ஆகியவற்றில் இயங்கும் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஜப்பான் நாட்டின் கையோ நகரில், சாலை மற்றும் தண்டவாளத்தில் இயங்கும் வாகனம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாகனம் மினி பஸ் வடிவத்தில் உள்ளது.latest tamil newsஇது சாலையில் செல்லும் போது டயர் வாயிலாக செல்கிறது. தண்டவாளத்தில் செல்லும் போது டயர்கள் மேலே துாக்கப்பட்டு, இரும்பு சக்கரங்கள் தண்டவாளத்தில் அமர்கின்றன. இரட்டை முறையில் இயங்கும் இந்த வாகனத்தை ஆஷா கோஸ்ட் ரயில்வே நிறுவனம் தயாரித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ஷிகேகி மியூரா கூறியதாவது:இந்த வாகனம் போக்குவரத்து வசதி குறைந்த கிராமங்கள் மற்றும் முதியவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அவர்கள் இந்த வாகனத்தில் ஏறி, அருகிலுள்ள நகரங்களுக்கு வந்த பின், ரயிலில் மாறுவதற்காக சிரமப்பட வேண்டியதில்லை.


latest tamil newsஇந்த வாகனமே ரயிலாக மாறி இயங்கும். முதற்கட்டமாக தெற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு தீவில் இந்த வாகனம் இயக்கப்படுகிறது. சாலையில் மணிக்கு 60 கி.மீ., தண்டவாளத்தில் 100 கி.மீ., வேகத்திலும் செல்லும் இந்த வாகனம் டீசலில் இயங்குகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
28-டிச-202103:31:58 IST Report Abuse
Sai இது புதிதல்ல இரண்டாம் உலக போர் காலத்தில் புழக்கத்திலிருந்து இப்போதும் இங்கே தண்டவாளங்களை வெல்டிங் செய்யும் வேலைக்கு பயன்பாட்டில் உள்ளது
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
27-டிச-202111:47:25 IST Report Abuse
தமிழ்வேள் Rail bus services are very well operative in IR, in branch lines less traffic density, mostly in North and north west India...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
27-டிச-202108:42:31 IST Report Abuse
duruvasar ஜப்பான் துணை முதல்வர் தமிழகத்திலும் இதைத்கொண்டுவர மனது வைக்கவேண்டும்.
Rate this:
Hari - chennai,இந்தியா
27-டிச-202111:57:38 IST Report Abuse
Hariஅவரு ஜப்பானுக்கு துணை முதல்வராக இருந்தவரை ,தமிழன் தனக்கு முதல்வராக வேணும்னு ஆசைப்பட்டு கூட்டிவந்து இப்போது மண்டை இல் ஒன்னும் இல்லாமல்,கொண்டையும் இல்லாமல் அலைவது உங்களுக்கு சந்தோசமா ? இன்னுமா உங்களுக்கு அவர் தேவைப்படுது,...
Rate this:
Perumal - Chennai,இந்தியா
27-டிச-202112:58:44 IST Report Abuse
Perumalஇப்படியே கதறுங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X