இது உங்கள் இடம்: குழுவால் என்ன பயன்!

Updated : டிச 27, 2021 | Added : டிச 27, 2021 | கருத்துகள் (41) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் எதற்கு பஞ்சம் இருக்கோ, இல்லையோ குழுக்களுக்கு பஞ்சமே இல்லை.கட்டடம் இடிந்ததா, பேருந்து விபத்தா, மர்ம மரணமா, மழை வெள்ள பாதிப்பா... எது நடந்தாலும், உடனே ஆராய ஒரு குழுவை அமைத்து, தன் கடமையை நிறைவேற்றி


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தமிழகத்தில் எதற்கு பஞ்சம் இருக்கோ, இல்லையோ குழுக்களுக்கு பஞ்சமே இல்லை.கட்டடம் இடிந்ததா, பேருந்து விபத்தா, மர்ம மரணமா, மழை வெள்ள பாதிப்பா... எது நடந்தாலும், உடனே ஆராய ஒரு குழுவை அமைத்து, தன் கடமையை நிறைவேற்றி விடும், தமிழக அரசு.இப்படித் தான், சமீபத்தில் திருநெல்வேலியில் ஒரு பள்ளிக் கட்டட சுவர் இடிந்து மூன்று குழந்தைகள் பலியான போதும் நடந்துள்ளது.



latest tamil news


தமிழக அரசு உடனே, 48 பேர் உடைய குழு அமைத்து, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னது.அக்குழுவின் பரிந்துரையின்படி, மோசமான நிலையில் உள்ள பல பள்ளி கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன; இறந்து போன பிஞ்சு குழந்தைகளின் குடும்பத்திற்கு நஷ்டஈடும் கொடுக்கப்பட்டுள்ளது.சில கட்டடங்களை இடித்தால் மட்டும், இப்பிரச்னைக்கு தீர்வு வருமா எனத் தெரியவில்லை.

ஆனால் பொதுமக்களை நம்ப வைக்க, அந்த நேரத்துக்கு குழு என்ற பெயரில் கூத்துக் கட்டுவதோடு சரி.பள்ளிக்கு, 'இன்ஸ்பெக் ஷன்' வரும் அதிகாரிக்கு, விருந்து கொடுத்து கவனிப்பதில் தான், கல்வி நிர்வாகம் அக்கறை செலுத்துகிறது; அதே போல கல்வி அதிகாரிகளும் வந்தோம், போனோம் என்று தான் இருக்கின்றனரே தவிர, ஈடுபாட்டோடு ஆய்வு செய்வதில்லை.உயிர்பலி ஏற்பட்டால், அரசைப் பொறுத்தவரை நஷ்டஈடு கொடுத்து, ஆய்வு என்ற பெயரில் ஒரு குழு அமைத்தால் போதும்.தலை வாரி, பூச்சூடி பாடசாலைக்கு செல்லும் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை; ஆயிரம் கனவுகள் சுமந்து கல்விக்கூடம் வரும் மாணவன் உயிருக்கு உத்தரவாதமில்லை. தான் பெறாத கல்வியை, தன் பிள்ளைகளாவது பெறட்டுமே என்று பள்ளிக்கு அனுப்பும் பெற்றோருக்கும் நிம்மதியில்லை.


latest tamil news


இதற்கு யார் அல்லது எது காரணம்?அரசை கேட்டால், கல்வித்துறையைக் கை காட்டும்; கல்வித்துறையை கேட்டால், பள்ளி நிர்வாகத்தைக் கை காட்டும். அவரவர் தப்பித்து கொள்ளத் தான் நினைக்கின்றனரே தவிர, அநியாயமாக மாணவர்கள் பலியாகின்றனர் என்று யாருமே எண்ணுவதில்லை.விபத்து நடந்த பின் விழிப்பதால் பயனில்லை. 'வருமுன் காப்போம்' என்று நம்பகத்தன்மையோடு செயலாற்ற வேண்டும். வருங்காலத்தைப் பற்றிய பல வண்ணக் கனவுகளோடு பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அச்சமின்றி கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள்.விபத்துக்கு பின் அமைக்கப்படும் ஆய்வுக்குழுவால், அப்பாவி மக்களை திருப்திபடுத்தலாம். ஆனால், பள்ளி சென்ற பிள்ளை வீடு திரும்பவில்லையே என்று வேதனையில் வாடும் பெற்றோருக்கு இந்த குழுவால் என்ன பயன்?

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-டிச-202123:11:57 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த விடியாமூஞ்சி அரசின் ஊழல் அக்கிரமங்களை விசாரிக்க ஒரு குழு அமைத்தால் என்ன?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-டிச-202123:05:45 IST Report Abuse
Natarajan Ramanathan சென்னை குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சில சுகாதாரப் பணியாளர்கள் இருந்தும் அவர்கள் பணிக்கு வந்து பள்ளியை சுத்தம் செய்வதை பார்த்ததே இல்லை. எப்போதும் குப்பையும் கூளமுமாக பள்ளிவளாகம் மிகவும் கேவலமாகவே இருக்கிறது. பள்ளி வளாகத்திலேயே கல்வித்துறை அலுவலகம் இருக்கிறது. மாநிலத்தின் தலைநகரிலேயே இந்த இழிநிலை என்றால் மற்ற இடங்களில் எப்படி இருக்கும்?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
27-டிச-202119:49:21 IST Report Abuse
Bhaskaran Kulanthaikal iranthuponaal nivaaranam pala latchangaludan kopukalai moodividukiraargal janangalum maranthuduvaango
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X