புதுச்சேரி : கனமழையால் உடைந்த செல்லிப்பட்டு படுகை அணையில் தற்காலிகமாக மண் மற்றும் மணல் மூட்டைகளை கொண்டு ஏற்படுத்தப்பட்ட தடுப்பும் உடைந்து, தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.புதுச்சேரி, திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே, சங்கராபரணி ஆற்றில், படுகை அணை கட்டப்பட்டது.தொடர்ந்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் அணையை முறையாக பராமரிக்காததால்,
2016ம் ஆண்டு படுகையணையின் நடுப்பகுதியில் சிறிய அளவில் உடைப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் மணல் மூட்டைகளை அடுக்கி, உடைப்பை தற்காலிகமாக சீரமைத்தனர்.இந்நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பு காரணமாக, சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதனால், சிறிய அளவில் உடைப்பு ஏற்பட்டிருந்த படுகை அணை, கடந்த நவ., 20ம் தேதி 140 மீட்டர் நீளத்திற்கு உடைந்தது.இதன் காரணமாக, ஆற்றில் தேங்கிய தண்ணீர் முழுதும் வீணாக வெளியேறியது. இதையடுத்து, மீதமுள்ள தண்ணீரையாவது சேமிக்கும் நோக்கில், உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தற்காலிகமாக மண் கொட்டியும், மணல் மூட்டைகள் அடுக்கி, தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.பொதுப்பணித் துறையின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, சிமென்ட் மூலம் தடுப்புக்கட்டை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதை பொருட்படுத்தாத அதிகாரிகள், களிமண் மற்றும் மணல் கொட்டி தற்காலிக தடுப்பு அமைத்தனர். அந்த தடுப்பும் சில நாட்கள்கூட தாக்கு பிடிக்காமல், நேற்று முன்தினம் இரவு உடைந்தது. இதனால், ஆற்றில் தேங்கியிருந்த குறைந்தபட்ச தண்ணீரும் தற்போது வீணாக வெளியேறி வருகிறது.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'படுகை அணையில் சிறிய அளவில் ஏற்பட்ட உடைப்பை அதிகாரிகள் சரியாக சீரமைக்காததால், கடந்த சில மாதங்களுக்கு முன் படுகையணை முழுமையாக உடைந்தது. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சிமென்ட் கலவை மூலம் தடுப்பு அமைக்க வலியுறுத்தினோம். ஆனால் அதிகாரிகள் அதை பொருட்படுத்தவில்லை. களிமண், மணல் மூட்டை கொண்டு ஏற்படுத்திய தடுப்பு ஓரிரு நாட்களிலேயே உடைந்து விட்டது. எனவே, உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கான்கிரீட் தடுப்பு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement