சிவகங்கை--''உயிரோடு வருவேனான்னு எனக்கு தெரியல...'' என மலேசியாவில் போதை கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டு காப்பகத்தில் சிக்கியுள்ள சிவகங்கை இளைஞர் ஆனந்த் 21, கண்ணீர் மல்க வீடியோ பதிவிட்டு தமிழக அரசு தன்னை மீட்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவகங்கை அருகே முத்துப்பட்டி புதுார் கண்ணன்- - முத்து தம்பதி 3 வது மகன் ஆனந்த் 21. இவர் டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் முடித்துள்ளார். பெற்றோர் விவசாய கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்தினர்.வறுமை காரணமாக 2019ல் ஆனந்தின் தந்தை கண்ணன் துபாய் சென்றார். அங்கு வேலையின்றி தவித்த நிலையில் மீண்டும் சிவகங்கைக்கு வந்து விட்டார். குடும்ப பிரச்னையை தீர்க்கவே டிப்ளமோ முடித்த ஆனந்த், காரைக்குடி அருகே கோட்டையூர் ஏஜன்டிடம் ரூ.70,000 செலுத்தி 2020 மார்ச்-சில் மலேசியா சென்றார்.இவர் சென்ற ஒரு மாதத்திற்கு மட்டுமே செய்த பணிக்காக ரூ.30,000 சம்பளமாக வழங்கியுள்ளனர். அதற்கு பின் மலேசியாவில் உள்ள போலி ஏஜன்ட் இவரை தனியாக ரூமில் அடைத்து வைத்து கொடுமை செய்ததோடு போதை பொருள் கடத்தல் கும்பலிடம் விற்றுள்ளார்.மலேசியா மிளக்கால் போலீசார் இவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அதற்கு பின் ஒரு ஆண்டாக ஆனந்தை சிவகங்கைக்கு அனுப்பாமல் வைத்துள்ளனர். தொடர்ந்து இவர் காரைக்குடி ஏஜன்ட் மூலம் சிவகங்கைக்கு வர முயற்சித்த போது பணம் பெற்று ஏமாற்றியது தெரியவந்துள்ளது.'உயிரோடு வருவேனா' என தெரியாதுகடந்த சில நாட்களுக்கு முன் காப்பகத்தில் இருந்து வீடியோவில் பேசி பதிவு ஒன்றை ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, வீட்டு ஏழ்மை காரணமாக மலேசியாவில் கோயில் உதவி பணியாளர் பணிக்கு ஏஜன்ட் மூலம் வந்தேன். இங்குள்ள போலி ஏஜன்ட் என்னை பணத்திற்காக போதை பொருள் கடத்தல் கும்பலிடம் விற்று விட்டார். அடித்து துன்புறுத்தி கொத்தடிமையாக வேலை வாங்கினர். பின்னர் மீட்கப்பட்டு காப்பகத்தில் உள்ளேன். இந்த சம்பவத்திற்கு பின் 'உயிரோடு வருவேனான்னு எனக்கு தெரியல...' எப்படியாவது இங்கிருந்து என்னை தமிழக அரசு மீட்க வேண்டும். என்னை போல் தமிழகத்தில் இருந்து வந்த பலர் தவிக்கின்றனர் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.எ
ன் மகனை மீட்டு தாருங்கள்
ஆனந்தின் தந்தை கண்ணன் கூறியதாவது: மலேசியா காப்பகத்தில் சிக்கியுள்ள எனது மகனை மீட்டு தருமாறு சிவகங்கை கலெக்டர், எஸ்.பி.,யிடம் பல முறை மனு அளித்துள்ளேன். தமிழக அரசு மலேசிய அரசிடம் பேசி மகனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE