தாயின் அன்பை மாற்றாந்தாயால் தர முடியாது: ஐகோர்ட் கருத்து

Updated : டிச 27, 2021 | Added : டிச 27, 2021 | கருத்துகள் (16) | |
Advertisement
பெங்களூரு-'எந்த ஒரு குழந்தைக்கும் தாய் தரும் அன்பு, பாசத்தை, அக்குழந்தையின் மாற்றாந்தாயால் தர முடியாது' என, கர்நாடக உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் கருத்து தெரிவித்துள்ளது. குழந்தையின் பராமரிப்பு தொடர்பாக தொடரப்பட்ட ஒரு வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த வழக்கில்

பெங்களூரு-'எந்த ஒரு குழந்தைக்கும் தாய் தரும் அன்பு, பாசத்தை, அக்குழந்தையின் மாற்றாந்தாயால் தர முடியாது' என, கர்நாடக உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் கருத்து தெரிவித்துள்ளது.latest tamil news


குழந்தையின் பராமரிப்பு தொடர்பாக தொடரப்பட்ட ஒரு வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குழந்தை, தன் தாயின் பராமரிப்பில் உள்ளது. தன்னிடம் போதிய வசதி உள்ளதாகவும், நன்கு படித்துள்ளதாகவும், அதனால் தாயிடம் இருப்பதைவிட குழந்தை தன்னிடம் இருந்தால் சிறப்பாக வளரும் என, குழந்தையின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.மனைவி மற்றும் குழந்தையிடம் இருந்து பிரிந்த பின் இவர் மறுமணம் செய்துள்ளார்.


latest tamil news


குழந்தையை நன்கு கவனித்து கொள்வதாக மாற்றாந்தாயும் கூறியுள்ளார்.எந்த ஒரு குழந்தைக்கும் தாய் அளிக்கும் அன்பு, பாசத்தை, மாற்றாந்தாயால் நிச்சயம் தர முடியாது. அதனால் குழந்தை அதன் தாயிடமே வளர வேண்டும். இது தொடர்பாக குடும்ப நல நீதிமன்றம் அளித்த உத்தரவை உறுதி செய்கிறோம்.வழக்கு தொடர்ந்ததற்காக குழந்தையின் தந்தை, 50 ஆயிரம் ரூபாயை குழந்தைக்கு அளிக்க வேண்டும். ஒரு மாதத்தில் அளிக்காவிட்டால், குழந்தையை பார்க்க அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
27-டிச-202117:10:09 IST Report Abuse
DVRR ஐயோ ஐயோ???/ நீதிபதியின் உயரிய சிந்தனைக்கு ஒரு வேட்டு வைக்கவேண்டுமானால் இந்த ஒரு வார்த்தை போதும் அவர்கள் நமது இந்து இலக்கியங்களை ராமாயணம் மஹாபாரதம் படிக்கவில்லை என்று இதனால் தெரிவிகின்றது???? கர்ணன் கிருஷ்ணர்????
Rate this:
Cancel
27-டிச-202114:25:12 IST Report Abuse
ஆரூர் ரங் ஸ்ரீ கிருஷ்ணரை யசோதா வளர்க்கவில்லையா🤔?
Rate this:
raja - Cotonou,பெனின்
27-டிச-202118:14:14 IST Report Abuse
rajaஆனா யசோதை நந்த கோபாலரின் மனைவாயா மட்டுமே வாழ்ந்தார்...ஆனால் இப்போதுள்ள தற்கால கண்ணகிகளின் நிலைதான் உங்களுக்கு தெரியுமே......
Rate this:
Cancel
susainathan -  ( Posted via: Dinamalar Android App )
27-டிச-202110:41:48 IST Report Abuse
susainathan the mother activity behaviour not good then the child should be safe for his father hand only and all mothers not good not bad
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X