
'அன்னப்பூரணி அரசு அம்மா' என்ற சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகிக் கொண்டிருந்த பெண் சாமியார் ஒருவரின் காணொளிகள் சமீபத்தில் கவனம் ஈர்த்தன. பளபள புடவை, லைட் மேக்கப், லிப்ஸ்டிக் சகிதம் சினிமா அம்மன் போன்று காரிலிருந்து இறங்கி நடந்து வரும் பெண்ணுக்கு கூலிக்கு பூ, பன்னீர் தூவுகின்றது ஒரு கூட்டம். தன்னை அம்மனாகவே நினைத்துக் கொண்டு தான் கூட்டி வந்த கூட்டத்திற்கு அருள்பாலிப்பது போல கை தூக்கி காட்சி தந்தபடி ஸ்லோமோஷனில் நடந்து வருகிறார். பின்னணியில் ஹைபிச்சில் அவருக்கு பில்டப் ஏற்றும் பாடல் ஒலிக்கிறது.
இதையெல்லாம் கூட நெட்டிசன்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்கள், அடுத்தடுத்து அன்னப்பூரணி அரசு அம்மா பக்கத்தில் வெளியான காணொளிகள் அவர் போலியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்பிவிட்டன. ஒரு இளம்பெண் அவர் பாதத்திற்கு அடியில் படுத்துக்கொண்டு 'அம்மா, அம்மா எங்க அம்மா' என்று கதறுகிறார். ஜெபக் கூட்டத்தில் பேமென்ட் வாங்கிக் கொண்டு நேரே இந்த கூட்டத்திற்கு வந்தது போல தெரிந்ததால் அன்னப்பூரணி அம்மாவின் வரலாற்றை ஆராயத் தொடங்கினர்.

அது 2012-ல் சென்று நின்றது. தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பிரபல பஞ்சாயத்து நிகழ்ச்சியில் சோக முகத்துடன் அரசு என்பவருடன் ஜோடியாக அமர்ந்துள்ளார் அன்னப்பூரணி. எதிர் வரிசையில் அரசின் மனைவி, அன்னப்பூரணியின் கணவர் அமர்ந்துள்ளார்கள். ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தை இருக்கும் அரசுக்கும், அன்னப்பூரணிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது தனியாக வசிப்பது வரை சென்றுள்ளது. அது இரு குடும்பத்திற்கு தெரிந்து பஞ்சாயத்தாகி இருக்கிறது. அன்னப்பூரணி - அரசு ஜோடி தங்களுக்கு விவாகரத்து தந்துவிடும் படி அந்நிகழ்ச்சியில் கேட்கின்றது.
அவர் தான் தற்போது ஆதிபராசக்தி அவதாரம் என ஊரை ஏமாற்றிக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவரின் கருத்தை கேட்க அலைபேசியில் தொடர்பு கொண்டோம். இணைய வீடியோ விஷயம் தெரிந்ததோ என்னவோ அலைபேசியை அணைத்து வைத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE