ஆயுள் காப்பீடு பாலிசி மிகவும் அவசியம்!

Updated : டிச 27, 2021 | Added : டிச 27, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
மும்பை: பாரதி ஆக்சா லைப் இன்சூரன்சின் தலைமை மற்றும் நியமன அதிகாரி வருண் குப்தா: இந்திய இளைஞர்களில் ஏறக்குறைய பாதி பேர், பொருளாதாரம் மற்றும் நிதி ரீதியான நம்பிக்கையுடன் உள்ளனர்; காப்பீட்டு பாலிசிகளை எடுக்க விரும்புகின்றனர். குறிப்பாக, இந்தத் தொற்று காலத்தில் முன்பை விட அதிகமாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு பாலிசிகளை எடுத்து வருகின்றனர்.ஆனால்,


மும்பை: பாரதி ஆக்சா லைப் இன்சூரன்சின் தலைமை மற்றும் நியமன அதிகாரி வருண் குப்தா: இந்திய இளைஞர்களில் ஏறக்குறைய பாதி பேர், பொருளாதாரம் மற்றும் நிதி ரீதியான நம்பிக்கையுடன் உள்ளனர்; காப்பீட்டு பாலிசிகளை எடுக்க விரும்புகின்றனர்.latest tamil newsகுறிப்பாக, இந்தத் தொற்று காலத்தில் முன்பை விட அதிகமாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு பாலிசிகளை எடுத்து வருகின்றனர்.ஆனால், காப்பீட்டு பாலிசிகளை வாங்குவதற்கான செலவு, அதிக மற்றும் சிக்கலான ஆவண வேலைகள், நேரமின்மை மற்றும் மாறுபட்ட வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், அவர்களால் இன்சூரன்ஸ் பாலிசிகளை சுலபமாக எடுக்க முடிவதில்லை.


latest tamil news


வீட்டு வாடகை, வீட்டுக் கடன் மாதத் தவணை, கார் கடன் மாதத் தவணை, கிரெடிட் கார்டு கடன் திருப்பிச் செலுத்துதல் போன்றவற்றின் செலவுகளை சமாளிக்க வேண்டியிருப்பதால், நீண்ட கால நிதித் திட்டமிடலைக் காட்டிலும் குறுகிய கால நிதித் திட்டமிடலையே விரும்புகின்றனர்.

இவர்கள் காப்பீட்டின் அவசியத்தை புரிந்து கொண்டாலும், எதிர்கால நிச்சயமற்ற நிலையில் இருந்து தங்களையும், தங்கள் அன்புக்குஉரிய குடும்ப உறுப்பினர்களையும், நிதி ரீதியாக பாதுகாக்கும் நீண்ட காலத் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.

காப்பீடு பாலிசியை எடுக்கும் முன், அந்த பாலிசியின் தன்மை மற்றும் பாலிசியை அளிக்கும் நிறுவனம் குறித்து முழுமையாக அறிந்து கொள்வது அவசியம்.கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுத்திருக்கும் நிலையில், வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையை நமக்கு உணர்த்தி இருக்கும் தற்போதைய சூழலில், ஓராண்டு, 'டேர்ம் பிளான்' மிகவும் பொருத்தமான ஆயுள் காப்பீடு பாலிசியாக கருதப்படுகிறது.

இந்தத் திட்டத்தில், 30 வயதுடைய ஆண், புகை பிடிக்காதவருக்கான 50 லட்சம் ரூபாய் பாலிசிக்கு, மாத பிரீமியம், வரி உட்பட 445 ரூபாய் மட்டுமே. இது குறித்து தெரியாதவர்கள், வல்லுனர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம்.இதுவரை எந்த டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியையும் எடுத்துப் பழக்கமில்லாதவர்கள், ஓராண்டு டேர்ம் பிளான் மூலம் அதை ஆரம்பிக்கலாம்.

அடுத்து வரும் ஆண்டுகளில் அதை தொடர்வதன் மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி ரீதியான முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தி தரலாம்.இந்தியா, இளைஞர்களால் நிரம்பிஇருக்கிறது. அவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தினரை காக்க, ஆயுள் காப்பீடு எடுப்பது மிகவும் அவசியம்!

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
27-டிச-202119:32:58 IST Report Abuse
M.COM.N.K.K. சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் இன்சூரன்ஸ் எடுக்க அனைவரும் தயார் அதற்கு ஒரு முட்டுக்கட்டை உள்ளது அதுதான் ஜீ எஸ் டி வரி இதை எடுத்தால் அனைவரும் கண்டிப்பாக இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க தயார்.இதை உணராதவர்கள் ஏதேதோ பேசுவது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.தயவு செய்து ஜீ எஸ் டி வரியை நீக்க என்ன வழி அதை செய்தால் போதும் மக்கள் அனைவரும் தனக்கான இன்சூரன்ஸ் பாலிசியை கண்டிப்பாக எடுப்பார்கள்.
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
27-டிச-202116:23:55 IST Report Abuse
Kalyan Singapore அப்புசாமி அவர்களே இதையே நீங்கள் ஏன் ஏ-மெயில் ஆகவோ குறுஞ்செய்தி ஆகவோ எல்லோர்க்கும் தெரியப்படுத்தக்கூடாது? அப்படி செய்வதாக மிரட்டித்தான் என்னுடைய பாலிசியின் Maturity பணத்தை நான் திரும்ப பெற முடிந்தது பணம் பெற்ற பின் பட்டுவாடா செய்த பெண் கேட்டா ளே ஒரு கேள்வி " Singapore ல் ஏதாவது வேலை கிடைக்க உதவ முடியுமா சார்? "
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
27-டிச-202116:11:15 IST Report Abuse
pattikkaattaan பாலிசி எடுத்தவருக்கு கிடைக்கும் பலனைவிட அரசுக்கு GST 18 % வரி உள்ளது ... தயவுசெய்து அதை குறைக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X