தி.மு.க.,வை அ.தி.மு.க.,வால் ஒன்றும் செய்ய முடியவில்லையே அது ஏன்?

Updated : டிச 27, 2021 | Added : டிச 27, 2021 | கருத்துகள் (27) | |
Advertisement
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு: கடந்த 1972ல், கருணாநிதியின் தி.மு.க.,வை அழிக்க வேண்டும் என்பதற்காக, எம்.ஜி.ஆர்., சபதம் எடுத்து, அ.தி.மு.க.,வை தோற்றுவித்தார். 50 ஆண்டுகள் ஆகியும் எங்கள் கட்சியினர் கட்டுக்கோப்பாக கொள்கை பிடிப்புடன் உள்ளனர்.அப்படியா... 50 ஆண்டுகள் ஆன பின்னும், தி.மு.க.,வையும், அதன் முன்னணி தலைவர்களையும், அ.தி.மு.க.,வால் ஒன்றும் செய்ய முடியவில்லையே அது
சீனிவாசன், ஜெயகுமார்

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு: கடந்த 1972ல், கருணாநிதியின் தி.மு.க.,வை அழிக்க வேண்டும் என்பதற்காக, எம்.ஜி.ஆர்., சபதம் எடுத்து, அ.தி.மு.க.,வை தோற்றுவித்தார். 50 ஆண்டுகள் ஆகியும் எங்கள் கட்சியினர் கட்டுக்கோப்பாக கொள்கை பிடிப்புடன் உள்ளனர்.


அப்படியா... 50 ஆண்டுகள் ஆன பின்னும், தி.மு.க.,வையும், அதன் முன்னணி தலைவர்களையும், அ.தி.மு.க.,வால் ஒன்றும் செய்ய முடியவில்லையே அது ஏன் என யோசித்தீர்களா?



தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை
: உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நகரில் நடந்த ஹிந்து ஆன்மிக மாநாட்டில் பேசியவர்கள், இந்திய இஸ்லாமியருக்கு எதிராக பகிரங்கமாக பேசியிருப்பது கவலையளிக்கிறது. வன்முறையை துாண்டிவிடும் பேச்சுகளை பிரதமர் கடுமையாக கண்டிக்க வேண்டும்.


உண்மையான ஹிந்து ஆன்மிக மாநாடாக இருந்திருந்தால், அவ்வாறு யாரும் பேசி இருக்க மாட்டார்கள். எனினும், வன்முறையை யார் துாண்டினாலும் கண்டிக்கவே வேண்டும்!



தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மண்ட் பேட்டி: 'ஜாக்டோ - ஜியோ போராட்ட காலங்களில் இடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும்; இடமாறுதல் உத்தரவுகள் முழுமையாக ரத்து செய்யப்படும்' என, தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வெளியிடப்பட்ட அரசாணையில் இதுபற்றி எதுவும் குறிப்பிடவில்லை.


ஆட்சிக்கு வருவதற்காக அப்படி, இப்படி சொல்லத் தான் செய்வர்... அதை நம்பி ஓட்டளித்து, இப்போது ஏமாந்து விட்டீர்கள் போல இருக்கிறதே!



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: தி.மு.க., அரசால் வழக்கு தொடரப்பட்டு உள்ள, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உறுதுணையாக இருப்போம். பிரச்னை என வரும்போது கை கழுவும் கட்சியல்ல, அ.தி.மு.க.,


latest tamil news




அவருக்கு இப்போது ஆதரவாக இருந்தால் தான், அடுத்து, உங்களை போன்றவர்கள் சிக்கும் போது, ஆதரவு கிடைக்கும் என்ற எண்ணமா?



அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன் பேட்டி: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சம்பாதித்த பணத்தை எல்லாம், தமிழக மக்களுக்காக வழங்குவேன் என்ற சபதத்தை நிறைவேற்றி சென்றார். ஆனால், தி.மு.க., அப்படியில்லை. லஞ்சம், லாவண்யம், ஊழலில் திளைக்கும், தி.மு.க., ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டுவோம்.


எம்.ஜி.ஆர்., அப்படி செய்ததால் தான், தமிழகமே அவரை இன்னமும் அன்புடன் நினைவு கூர்கிறது. தி.மு.க., அப்படியில்லை என்பதை இன்னமும் அறியாமலா இருக்கிறீர்கள்?


Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா
27-டிச-202120:40:16 IST Report Abuse
இராம தாசன் ரொம்ப சிம்பிள் - மன்னர் ஆட்சி (தி மு க ) Vs மக்கள் ஆட்சி (அ தி மு க). அ தி மு க வில் யார் வேண்டுமானாலும் அதிகாரத்துக்கு வரலாம் - சங்கர மடம் போல் - ஆனால் தி மு க வில் அது நடக்காது .. ஒன்லி மன்னர் குடும்பம் - மற்ற அனைவரும் அடிமைகள்
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
27-டிச-202120:26:26 IST Report Abuse
Arul Narayanan திமுகவை அழிவிலிருந்து இருமுறை மூப்பனார் தான் காப்பாற்றினார். 1976ல் தனது ஆட்களை இந்திராவிடம் அடகு வைத்து இரண்டாம் இடத்தில் இருந்த காமராஜர் காங்கிரஸை கடைசிக்கு தள்ளினார். வைகோ வெளியேற்றத்தால் சாகவிருந்த திமுகவை தமாக கூட்டு வைத்து ஆட்சிக்கே கொண்டு வந்து விட்டார்.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
27-டிச-202119:20:57 IST Report Abuse
Narayanan Please don't repeat the same comment
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X