கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துங்கள்; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Updated : டிச 27, 2021 | Added : டிச 27, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்வுகளால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்தியாவில் ஒமைக்ரான் உள்ளிட்ட கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 6,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவில்
National Directives, Strictly Followed, Ministry, Home Affairs, States, UTs, கட்டுப்பாடுகள், தீவிரம், ஒமைக்ரான், இந்தியா,

புதுடில்லி: புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்வுகளால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் உள்ளிட்ட கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 6,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்குவது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.


மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

latest tamil newsஅந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்வுகளால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஏற்கனவே உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க, 144 தடை உத்தரவுகளை கூட மாநில அரசுகள் பிறப்பிக்கலாம்.

தேவை ஏற்படுமானால், இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தலாம். ஒவ்வொரு மாநிலமும், தங்கள் பகுதிகளில் சூழலுக்கு ஏற்ப பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம். மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவெடுக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
27-டிச-202119:50:33 IST Report Abuse
Bhaskaran Perum hotelgal resortukalil puthaandukondaatam arasin nallaasiyudan nadaiperum
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
27-டிச-202119:43:20 IST Report Abuse
John Miller Please don't repeat the same comment
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
27-டிச-202119:41:56 IST Report Abuse
John Miller Please don't repeat the same comment
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X