நீலகிரி: குன்னூர் கிராமத்தில் படுகர் இன மக்களின் பாரம்பரிய கன்னி ஹெத்தை அம்மன் திருவிழாவில் காணிக்கை செலுத்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஜெகதளாவில் கொண்டாடும் இந்த பண்டிகை சிறப்பு வாய்ந்தது. 48 நாட்கள் விரதம் மேற்கொண்ட ஹெத்தைக்காரர்கள், தாய் வீடான கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய உடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு , அருள்வாக்கு கூறினர்; கடந்த, 24ல் காரக்கொரையில் பூ குண்டம் இறங்கினர்.
இன்று (டிச.,27) கன்னி ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள ஜெகதளாவில், பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவிலில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பாரம்பரிய சேலை அம்மனுக்கு சார்த்தப்பட்டது. மடியரை என அழைக்கப்படும் பாறை ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து, அம்மன் ஊர்வலம் துவங்கியது. ஹெத்தை தடியுடன், ஹெத்தைக்காரர்கள் ஊர்வலமாக ஜெகதளா வந்தனர்.
இதில் , குடைகள் புடைசூழ, ஆடல் பாடல்களுடன் ஹெத்தை அம்மனை பூசாரி தனது தலையில் சுமந்தவாறு வந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. வரும் வழியில் வேட்டிகளை விரித்து, அதன் மீது நடக்க வைத்தனர். ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் சுற்றுக்களில் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE