ஏ.டி.எம். மிஷின் வெடி வைத்து தகர்ப்பு: ரூ.16 லட்சத்தை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்

Updated : டிச 27, 2021 | Added : டிச 27, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
புனே: மகாராஷ்டிராவில் ஏ.டி.எம்., மிஷினை வெடிவைத்து தகர்த்து அதிலிருந்த ரூ. 16 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் சக்கான் என்ற பகுதியில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு ஏடிஎம் மையத்திற்கு புகுந்த கொள்ளையர்கள் மிஷனை உடைக்க முயற்சித்துள்ளனர்.
  ஏ.டி.எம். மிஷின், ரூ.16 லட்சம், கொள்ளை

புனே: மகாராஷ்டிராவில் ஏ.டி.எம்., மிஷினை வெடிவைத்து தகர்த்து அதிலிருந்த ரூ. 16 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் சக்கான் என்ற பகுதியில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு ஏடிஎம் மையத்திற்கு புகுந்த கொள்ளையர்கள் மிஷனை உடைக்க முயற்சித்துள்ளனர். முடியாததால், வெடி வைத்து தகர்த்து அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.


latest tamil newsஇதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, கொள்ளையர்களின் கைரேகை உடைக்கப்பட்ட இயந்திரத்தின் பாகங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். ஏ.டி.எம்.,மிஷின் அறையில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காமிரா உள்பட அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
போலீஸ் கமிஷனர் கூறுகையில், ஏ.டி.எம்.,கொள்ளை சம்பவத்தில் மூன்று பேர் ஈடுபட்டிருக்கலாம், இயந்திரத்தில் சுமார் ரூ. 16 லட்சம் ரொக்க பணம் வைக்கப்பட்டிருந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
28-டிச-202104:20:28 IST Report Abuse
மலரின் மகள் இவர்கள் கொள்ளையர்களாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என்று எண்ணுகிறேன். நிச்சயமாக இவர்கள் பயங்கரவாதிகளாகத்தான் இருக்கவேண்டும். தீவிரவாதிகளுக்கு பணம் வந்து சேரும் அனைத்து வலிகளும் அடைபட்டு கொண்டே இருப்பதால், இப்போது இப்படி கொள்ளையடித்து பயங்கரவாதத்திற்கு பணம் எடுக்கிறார்கள் என்று சந்தேகிக்கவேண்டியுள்ளது. கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் நாடு முழுவதும் இப்போது பிடிபடுகிறது, பதுக்கியவர்கள் விற்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆகவே பயங்கரவாதிகள் எ டி எம் பணத்தை கொள்ளையடிக்கும் திட்டதிக்ரு வந்திருக்கிறார்கள் போல. இது மிகவும் தேசத்திற்கு ஆபத்தானது என்றாலும், வேறுவகையில் நன்மை பயக்கலாம். சமூகத்திற்குள் மக்களோடு மக்களாக இருந்து கொண்டு உள்ள பயங்கரவாதிகளை இப்போது காமிராக்கள் மூலம் இனம் கண்டுகொள்ளமுடியும். உள்நாட்டிலேயே இருந்துகொண்டு தேசத்திற்கு எதிராக செயல்படுவோரை கண்டுபிடிக்க வழிவகுக்கும் என்று தீவிரமாக இதை அரசு கையாளவேண்டும்.
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-டிச-202121:49:57 IST Report Abuse
Chinnappa Pothiraj நாட்டில் இவ்வாறு நடப்பதற்குண்டான மூலகாரணம் என்ன. ஏன் இத்தகைய நிலை. சமூக விரோதிகளின் கொடுமையை காவல் துறை சென்றாலும் மக்களுக்கு நீதியை பெறமுடியவில்லை. நல்லவர்களாக உழைத்து வாழ விரும்பினாலும் வாழமுடியவில்லை, நீதிகேட்டு காவல்துறை சென்றாலும் நீதிகிடைப்பதில்லை என்பதின் விரக்தியின் வெளிப்பாடா இச்செயல்கள். நாட்டின் பாதுகாப்பை இராணுவம் உறுதி செய்வதுபோல் உள்நாட்டின் மக்களின் உயிர், பொருள், அரசின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டியது எந்த துறையின் கடமை, பொறுப்புள்ள நபர்கள் யார்? ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், மக்கள் நிம்மதியாக அமைதியாக வாழாமல் அச்சுறுத்தலுடன் இருந்தால்தான், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பயன்பெறமுடியும் என்பதாலா? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதுபோல சம்மந்தப்பட்ட ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கண்டும் காணாமல் இப்படி நடந்தால்தான் நம்முடைய துறைகளும் மிக (பிசியாக) கண்ணும் கருத்துமாக செயல்படுவதாக மக்களுக்கு காட்டிக்கொள்கிறார்களா? நாடுமுழுவதும் குற்றவாளிகளை கணிணிமூலம் ஒருங்கினைத்து கடுமையான தண்டணைமூலம் அல்லது என்கவுண்டர்கள் மூலம் தடுக்காதது ஏன்?மக்களின் வரிப்பணத்தால் அரசும் அரசு அதிகாரிகளும் பயன்பெற்றுக்கொண்டு நாட்டைமுன்னேறவிடாமல் செயல்படும் இத்துறையைச்சார்ந்தவர்களை தேசத்தின்மேல் அக்கறையில்லாதவர்கள் என்றமுறையில் இவர்களுக்கு தண்டணைகொடுக்க சட்டத்தில் இடமுள்ளதா? யாரையும் புண்படுத்துவது என்நோக்கமல்ல, நாடுநலம் பெறவேண்டும், முன்னேறவேண்டும், வந்தேமாதரம்,ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel
27-டிச-202121:45:53 IST Report Abuse
அப்புசாமி டிஜிட்டல் இந்தியாவாவது புண்ணாக்காவது... சுய வேலைவாய்ப்புதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X