'ஏர் இந்தியா' நிறுவனம் கைமாறுவதில் தாமதம்

Updated : டிச 27, 2021 | Added : டிச 27, 2021 | கருத்துகள் (2)
Advertisement
புதுடில்லி :ஒரு சில அமைப்புகளின் அனுமதி கிடைக்காததால், 'ஏர் இந்தியா' நிறுவனத்தை டாடா சன்ஸ் கையகப்படுத்தும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இழப்பில் உள்ள பொதுத் துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடா சன்ஸ், 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, டாடா சன்ஸ், 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ரொக்கமாக வழங்கும். எஞ்சிய தொகையான, ஏர் இந்தியாவின்
'ஏர் இந்தியா', கைமாறு, தாமதம்

புதுடில்லி :ஒரு சில அமைப்புகளின் அனுமதி கிடைக்காததால், 'ஏர் இந்தியா' நிறுவனத்தை டாடா சன்ஸ் கையகப்படுத்தும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


இழப்பில் உள்ள பொதுத் துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடா சன்ஸ், 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, டாடா சன்ஸ், 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ரொக்கமாக வழங்கும். எஞ்சிய தொகையான, ஏர் இந்தியாவின் கடனுக்கு டாடா சன்ஸ் பொறுப்பேற்றுக் கொள்ளும்.


latest tamil news




இந்த பணிகள் அனைத்தையும், டிசம்பர் 31க்குள் முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், சில ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதிக்கு காத்திருப்பதால், ஏர் இந்தியா கைமாறுவது தாமதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் ஒப்பந்தப்படி அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் கையகப்படுத்தும் என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28-டிச-202104:35:00 IST Report Abuse
Mani . V எங்கள் விருப்பம் அதானி, அம்பானிக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என்பது. ஆனால், இடையில் டாடா புகுந்து விட்டது. அதுனால எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழுத்தடிப்போம்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
28-டிச-202104:29:07 IST Report Abuse
மலரின் மகள் கையகப்படுத்தும் என்ற வார்த்தை பிரயோகத்தை விட, பெற்று கொள்ளும் என்று சொல்வது சரியாக பொருந்தும் போல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X