கணித வல்லுனர், என்.உமாதாணு: ஐ.நா., சபை ஒவ்வொரு ஆண்டும் கல்வி குறித்த தரப்பட்டியலை வெளியிடுகிறது. அந்தப் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளின் பெயர் கட்டாயம் வந்து விடுகிறது. அவை, பின்லாந்து மற்றும் டென்மார்க். பின்லாந்தில், 7 வயதில் தான் ஒரு குழந்தை பள்ளிக்கு செல்ல துவங்குகிறது. 9ம் வகுப்பு வரை தேர்வு இல்லை. ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல், இரண்டரை வயதில் ப்ரீகேஜி, மூன்று வயதில் எல்.கே.ஜி. நான்கு வயதில் யு.கே.ஜி., என்ற சித்ரவதை அங்கே இல்லை.
முதல் மூன்றாண்டுகளுக்கு, பாதி நாட்கள் தான் பள்ளிக்கூடம். பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். இசை, ஓவியம், விளையாட்டு மற்றும் பிற கலைகளும் உண்டு. மேலும், 13 வயது வரை, 'ரேங்கிங்' என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது. தகுதி அட்டை தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது. இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை. ஒவ்வொரு பள்ளியிலும் மருத்துவர் ஒருவர் இருப்பார். ஒரு பள்ளியில் அதிகபட்சமாக, 600 மாணவர்கள் இருக்கலாம்; ஒரு வகுப்பிற்கு, 15 முதல் 20 மாணவர்கள். பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. 'என் பொண்ணு இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்கிறா' என சீன் போட முடியாது.முன்பருவ, அடிப்படை கல்வி வகுப்புகளில் பாடப்புத்தகங்கள், உணவு, மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி ஆகியவை இலவசம். மேல் நிலையில் படிக்கும் மாணவர்கள் தாங்களே புத்தகங்களை மட்டும் வாங்க வேண்டியிருக்கும்.
'டியூஷன்' என்ற அருவருப்பான கலாசாரம் அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை. மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களின் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்.பின், ஆறு மாத காலம் ராணுவ பயிற்சி, ஒரு ஆண்டுக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறைகளில் ஆசிரியர் பயிற்சி, ஏதாவது ஒரு பாடத்தில் புராஜெக்ட், குழந்தை உரிமை பயிலரங்கங்களில் பங்கேற்பது. நாட்டின் சட்டதிட்டங்கள் குறித்த தெரிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்பு பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவ சான்று என ஆசிரியர் பயிற்சிக்க ஏழு ஆண்டுகள் செலவிட வேண்டும்.நம்மிடம் மாற்றம் வேண்டும்.தொடர்பு எண்: 9360482003.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement