சீனா மூலம் இலங்கை தமிழர்களுக்கு ஆபத்து?

Updated : டிச 29, 2021 | Added : டிச 27, 2021 | கருத்துகள் (63)
Advertisement
இலங்கை தமிழர்களை பகடையாக்கி, அந்நாட்டை வெற்றி கொள்ளவும்; பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து, 2050க்குள் உலகிலேயே மிகப்பெரிய வல்லரசாக மாறவும், சீனா திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதியை, ஹாங்காங் போல மாற்றவும், அந்நாட்டு மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் சுதந்திரமாக மீன்
 சீனா , இலங்கை தமிழர்கள், ஆபத்து

இலங்கை தமிழர்களை பகடையாக்கி, அந்நாட்டை வெற்றி கொள்ளவும்; பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து, 2050க்குள் உலகிலேயே மிகப்பெரிய வல்லரசாக மாறவும், சீனா திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதியை, ஹாங்காங் போல மாற்றவும், அந்நாட்டு மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் சுதந்திரமாக மீன் பிடிக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கவும், சீனா தயாராகி வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் விளக்கி உள்ளார். இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே, தமிழகம் மற்றும் புதுச்சேரி கவர்னர்களிடமும் இது குறித்து தெரியப்படுத்தி உள்ளார்.


இலங்கையில் விடுதலை புலிகள் மற்றும் ராணுவத்திற்கு இடையே நடந்த போர், ௨௦௦௯ல் முடிந்ததும், தமிழர்கள் தனித்து விடப்பட்டனர். அவர்களுக்கான மறு வாழ்வு குறித்து, அடுத்தடுத்து அரசு அமைத்த ஆட்சியாளர்கள் பெரிய அளவில் கவலைப்படவில்லை. அதனால், தமிழர்கள் பலரும் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர். தற்போது, 10 ஆயிரம் தமிழக குடும்பங்கள் மட்டுமே, இலங்கையில் உள்ளன.இலங்கை அரசானது, பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அளவில் சீனாவை சார்ந்து உள்ளது. இதை வசதியாக பயன்படுத்திக் கொள்ளும் சீனா, இலங்கையை மேம்படுத்துவதாகக் கூறி, சாலைகள், மேம்பாலங்கள் அமைத்து, வர்த்தகத்தை கைக்குள் போட்டுள்ளது. மிகப் பெரிய துறைமுகத்தையும் கட்டியுள்ளது.இந்தியாவை சுற்றி ஆப்கானிஸ்தான் வழியே, பாகிஸ்தான் வரை மிக நீண்ட சாலை அமைத்துள்ள சீனா, இந்தியாவின் கிழக்கு பகுதியில் இலங்கையை வசமாக்கி வருவதால், இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.இலங்கை முழுதும் தன்வசமாகி விட்டால், யாழ்ப்பாணம் நகரை ஹாங்காங் போல மேம்படுத்தி, அரசு அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

அதற்காக, இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி, அவர்களுக்கு சீன மொழியான மாண்டரினை கற்றுத் தந்து, சகல வசதிகளையும் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இவர்களை வைத்தே, நாளடைவில் இலங்கை அரசை கைப்பற்ற முடிவு செய்துள்ளது.இலங்கை மீனவர்களை இந்திய எல்லைக்குள் சகஜமாக மீன்பிடிக்க அனுப்பி வைத்து, நமக்கு மண்டைக் குடைச்சல் ஏற்படுத்தவும் தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்திற்கு அடிபணியாதவர்களை, இலங்கையை விட்டே துரத்தும் நடவடிக்கையில் ஈடுபடவும் ரகசிய திட்டம் தீட்டி வருகிறது.

சமீப காலமாக, மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் திடீரென காணாமல் போவதும், இலங்கையால் சிறை பிடிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இது, இலங்கை அரசு வாயிலாக சீனாவின் மறைமுக மிரட்டலாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.மேலும், தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியில், சீன துாதர், அதிகாரிகள் என சிலரின் நடமாட்டம் அடிக்கடி தென்படுவதை, தமிழக மீனவர்களும் சுட்டிக் காட்டி வருகின்றனர்.இவ்விஷயங்கள் அனைத்தையும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கி இருக்கிறார்.
இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே, புதுச்சேரி மற்றும் தமிழக கவர்னர்களுக்கும், தமிழக முதல்வருக்கும் இது குறித்து தெரிவித்துள்ளார்.

எனவே, இலங்கை வாழ் தமிழர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்கள் அங்கு நிம்மதியாக வாழவும், நம் பார்லிமென்ட்டில் தமிழக எம்.பி.,க்களும், அடுத்து வரும் சட்டசபை அமர்வுகளில் எம்.எல்.ஏ.,க்களும் விவாதம் நடத்தி, சீனாவின் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு வழிகோலும் வகையில், தமிழக கவர்னர் வரும் 5ம் தேதி துவங்க உள்ள சட்டசபை கூட்டத்தில், இது குறித்து முதல் உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - புதுடில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
28-டிச-202120:03:17 IST Report Abuse
Sai யார் மீதாவது பழிபோட்டு தப்பித்துக் கொள்வதே வாடிக்கையாகிப் போனது இதென்னவோ இலங்கை தமிழர்கள் பிரச்சினை, தமிழகத்துக்கான பிரச்சினை என்பதுபோல இதில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக சட்டசபை உறுப்பினர்கள் முழு முயற்சியும் முன்னெடுப்பும் செய்ய வேண்டுமென சொல்வது சரியா? இது இந்தியா முழுமைக்கான பாதுகாப்பு பிரச்சினையென்று தங்களைப் போலவே இந்திய அரசும் உணர்ந்து கொள்வதெப்போது? சீனன் அருணாச்சல எல்லையில் வந்தால் அது அந்த மாநில பிரச்சியா? காஷ்மீர் எல்லையில் வந்தால் மட்டுமே இந்திய பிரச்சினையோ? இவ்விஷயங்கள் அனைத்தையும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கி இருக்கிறார். அதுபற்றி இந்திய நாட்டின் பாதுகாப்பு மந்திரி என்ன சொல்கிறார் என்று பேட்டியெடுத்து பிரசுரிக்க வேண்டும்
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
28-டிச-202119:50:46 IST Report Abuse
Sivagiri தீயமுக முதலாளிகள், துணை, இணை, உற்றார் உறவினர்கள், மேனேஜர்கள், இலங்கையில்/இந்தோனேசியாவில்/பிலிப்பைன்ஸில், தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்கங்கள், இன்னும் என்னன்னவோ வகைகளில், ஆயிரக்கணக்கான கோடிகளில் - முதலீடு செய்துள்ளனராம்.. அதெல்லாம் சுவாஹா-தானா?? சூப்பர் சூப்பர் . . .
Rate this:
Cancel
Dharmakulasingham - Jaffna,இலங்கை
28-டிச-202119:03:25 IST Report Abuse
Dharmakulasingham நான் இலங்கை நாட்டில் யாழ்ப்பாணம் நகரில் வசிக்கிறேன். இந்திய சீன எல்லை பிரச்னை இருந்தாலும் இந்திய சீன பொருளாதார உறவுகள் நெருக்கமாக உள்ளன.இலங்கை தமிழர்கள் சிறப்பாக வாழுகிறார்கள்.தமிழ்நாட்டில் தலித் மக்களின் பிரச்சினைகளை கேட்டுள்ளேன் .எமது நாட்டில் தலித் மக்குளும் உயர் நிலையில் வாழுகிறார்கள்,திருமாவேலன், சீமான் போன்றோரின் கதைகள் கட்டு கதைகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X