இது உங்கள் இடம்: தி.மு.க.,வின் பெயரை மாற்றுவீரா?

Added : டிச 28, 2021 | கருத்துகள் (130)
Advertisement
கே.முகுந்தன், குழித்துறை-, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் தை மாதம் முதல் நாளை, தமிழ் புத்தாண்டாக மாற்ற, தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தி.மு.க., அரசு பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. அதுவும்,
சித்திரை முதல் நாள்,   தமிழ் புத்தாண்டு,  தமிழர்கள்,   தை மாதம் முதல் நாள், தி.மு.க.,  திராவிடம்,

கே.முகுந்தன், குழித்துறை-, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தை மாதம் முதல் நாளை, தமிழ் புத்தாண்டாக மாற்ற, தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தி.மு.க., அரசு பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. அதுவும், திராவிடத்தை முன்னிலைப்படுத்த கட்சி முயற்சிக்கிறது என்றால், அதன் உள்நோக்கம் நல்லதாக இருக்க வாய்ப்பில்லை.

தமிழர்கள், தமிழகத்தில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, கனடா போன்ற நாடுகளிலும் அதிகமாக வசிக்கின்றனர். தமிழக அரசின் ஆணை, அவர்களை கட்டுப்படுத்த போவதில்லை. தமிழகத்தில் உள்ள தி.மு.க., தொண்டர்கள் மட்டும் தை மாதம் முதல் நாளை, தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவர்;


latest tamil newsஆனால், உலகமெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும், சித்திரை முதல் நாளை தான் கொண்டாடுவர் அது, தி.மு.க., அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்பதை, முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். தமிழ் புத்தாண்டு என்பது, தமிழர்களின் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்தது. அசுவினி முதல் ரேவதி வரை, 27 நட்சத்திரங்களையும்; மேஷ ராசி துவங்கி மீனம் வரையுள்ள, 12 ராசிகளுக்குள் வரையறுத்து வைத்தான் தமிழன்.

12 மாதங்களுக்கும் முறையே ஒவ்வொரு ராசி என, கணக்கிட்டு வைத்தான்.தமிழர் பண்பாட்டை சிதைக்க முற்பட்டால், வாழ்வியலில் ஏராளமான மாற்றங்களை செய்ய வேண்டி வரும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என, தமிழ் நிலப்பரப்பை ஐந்தாக பிரித்து, அவற்றிற்கு முறையாக முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை போன்ற இறை வடிவங்களை வழிபடுகிறான்,

தமிழன்.நாளையே, 'கருணாநிதியின் வம்சாவளியினரை, ஐவகை நிலங்களின் தலைவர்களாக நியமித்து புதிய அரசாணை வெளியிடுவோம்' என, தி.மு.க., அரசு முயற்சி செய்தால், அதற்கு முன்னால், தமிழ் இலக்கண நுால்களில் மாறுதல் செய்ய வேண்டும்.'மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே' என்கிறது, தொல்காப்பியம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ் இலக்கியம், பண்பாடு, கலாசாரம், வரலாறு தெரியுமா? உண்மையிலேயே முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழ் மீது பற்று இருந்தால், திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் பெயரை, 'தமிழர் முன்னேற்ற கழகம்'என்று மாற்றட்டும். அதற்கு பின், தமிழ் புத்தாண்டை மாற்றுவது குறித்து யோசிக்கலாம்!

Advertisement
வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
31-டிச-202105:51:12 IST Report Abuse
rmr தெலுங்கர் தமிழத்தில் ஆட்சி செய்தால் இப்படி தான் இருக்கும் .தமிழர்கள் திராவிட கட்சிகளை தவிர்க்க வேண்டும்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
31-டிச-202105:43:05 IST Report Abuse
meenakshisundaram நாங்க ஏன் பெயரை மாத்தறோம் ?சாஸ்திரிகளை கன்சல்ட் செஞ்சு நல்ல சமஸ்க்ரித பெயரில்ல வச்சிருக்கோம் -முக வின் ஒரிஜினல் பெயரே 'தட்சிணா மூர்த்தி அல்லவா கட்சியோ 'உதய சூரியன் ?நல்ல தமிழ பற்றுக்கொண்ட சூரிய நாராயண சாஸ்திரி தான் தனது பெயரை பரிதி மர் கலைஞர் னு மாத்தி கிட்டார் ? நாங்க ஏன் மாத்தணும் ?
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
02-ஜன-202208:46:02 IST Report Abuse
Matt Pகலைஞ்சர் நல்ல தமிழ் பெயர் இல்லை. கலை என்ற வார்த்தையும் வட மொழி தான்....
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
29-டிச-202104:11:29 IST Report Abuse
S. Bharani பழைய கதை எல்லாம் பேசி பொழுதுபோக்கு நடத்தி என்ன பயன்? தமிழ் புத்தாண்டு தமிழ் பேசும் இந்துக்கள் மட்டுமே உலகந்தழுவி சித்திரை மாதம் முதல் தேதி மாற்றம் இன்றி கொண்டாடி வருகின்றனர் இறைபற்றற்ற கருணாநிதியோ ஸ்டாலினோ எந்த மாற்றம் செய்தாலும் பயனில்லை ஓட்டு பொறுக்க செய்ய தந்திரம் என்பதை இந்துக்கள் அனைவரும் உணர வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X