புதிய குடியிருப்புகள் கட்டப்படும்: வைத்தியலிங்கம்| new buildings will be constructed | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய குடியிருப்புகள் கட்டப்படும்: வைத்தியலிங்கம்

Added : ஆக 11, 2011
Share
சென்னை : ""மிகவும் பழுதடைந்த குடியிருப்புகளை அகற்றி விட்டு, புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும்'' என்று, வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்தார். சட்ட சபையில் கேள்வி நேரத்தின் போது, "வீட்டு வசதி வாரிய வீடுகள் மிகவும் சிதிலமடைந்துள்ளது. அந்த வீடுகளை பழுது பார்க்க வேண்டும் என, கடந்த ஆட்சியில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

சென்னை : ""மிகவும் பழுதடைந்த குடியிருப்புகளை அகற்றி விட்டு, புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும்'' என்று, வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்தார். சட்ட சபையில் கேள்வி நேரத்தின் போது, "வீட்டு வசதி வாரிய வீடுகள் மிகவும் சிதிலமடைந்துள்ளது. அந்த வீடுகளை பழுது பார்க்க வேண்டும் என, கடந்த ஆட்சியில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. மனிதநேயம், கருணை, காருண்யம் கொண்ட இந்த அரசு, அக்கோரிக்கையை பரிசீலனை செய்யுமா?' என்ற கேள்வியை எழுப்பினர். அமைச்சர் வைத்தியலிங்கம் பதிலளித்து பேசும் போது, "நாற்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, மிகவும் பழுதடைந்துள்ள குடியிருப்புகளை அப்புறப்படுத்தி விட்டு, புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும். கடந்த தி.மு.க., ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்தில் தவறுகள் நடந்துள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X