'ஒன்றிய அரசு' என கூறுவதை அனுமதிக்காதீர்; தமிழக கவர்னரிடம் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

Updated : டிச 28, 2021 | Added : டிச 28, 2021 | கருத்துகள் (27) | |
Advertisement
கோவை : 'மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என தமிழக அரசு கூறுவதை அனுமதிக்கக் கூடாது' என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, தமிழக கவர்னரை சந்தித்து முறையிட்டுள்ளார். புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்துள்ளார்.அதன் விபரம்:தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள், நாட்டின் நன்மதிப்பை கெடுக்கும் வகையிலும்,


கோவை : 'மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என தமிழக அரசு கூறுவதை அனுமதிக்கக் கூடாது' என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, தமிழக கவர்னரை சந்தித்து முறையிட்டுள்ளார்.latest tamil newsபுதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்துள்ளார்.அதன் விபரம்:தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள், நாட்டின் நன்மதிப்பை கெடுக்கும் வகையிலும், தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றன.முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், மத்திய அரசை இழிவுபடுத்த வேண்டுமென்ற நோக்கில், 'ஒன்றிய அரசு' என்கின்றனர்.


latest tamil news
தமிழகத்தில், 'ஒன்றியம்' என்ற வார்த்தை, ஊராட்சியை அழைக்க பயன்படுத்தப்படுகிறது. 'யூனியன் ஆப் ஸ்டேட்ஸ்' என, அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதை வேண்டுமென்றே திரித்து, 'ஒன்றிய அரசு' என்று பயன்படுத்துகின்றனர். 'இந்திய அரசின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் கட்டுப்படுவோம்' என்ற உறுதிமொழியுடன், தற்போதைய முதல்வர் மற்றும் அமைச்சர்களும், தமிழக சட்டசபை உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

ஆனால், அவர்களின் நடவடிக்கைகள் நம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவே உள்ளன.பள்ளி பாடப்புத்தகங்களிலும், 'ஒன்றியம்' என்ற வார்த்தை இடம் பெற்று விடும் ஆபத்து உள்ளது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வேண்டுமென்றே, அவ்வார்த்தையை பயன்படுத்தினர்; இம்முறை அது நடக்கக் கூடாது.

மத்திய அரசு மற்றும் பஞ்சாயத்து யூனியன் இரண்டையும் சமப்படுத்த முடியாது. இரண்டும் வெவ்வேறு அர்த்தங்களை கொண்டுள்ளன.இந்திய இறையாண்மையின் மீதான அவர்களின் வெறுப்பை, தமிழ் மக்கள் மத்தியில் விதைக்கவே, 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தையை ஸ்டாலினும், அக்கட்சியினரும் திரும்ப திரும்ப பயன்படுத்துகின்றனர்.

இனி, எந்த நிலையிலும் மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என, தமிழக அரசு மொழிபெயர்க்க அனுமதிக்கக்கூடாது.பொதுமக்களும்,பெற்றோர்களும், மாணவர்களும் நீட் தேர்வை வரவேற்கின்றனர். 'நீட்' தேர்வுக்கு எதிராக, தமிழக அரசு நிறைவேற்றியதீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது.இவ்வாறு, கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
28-டிச-202111:39:10 IST Report Abuse
அம்பி ஐயர் இல்ல.. நான் தெரியாமத் தான் கேட்குறேன்.. ஒரு வேளை... ஒருவேளைதான்.. கற்பனை தான்... காங்கிரஸ் மத்தியில் ஆட்சியைப் பிடித்துவிட்டால் ஒன்றிய அரசு என அழைப்பார்களா??மேலும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால்.. பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை ஐந்நூறு, ஆயிரம் செல்லத் தக்கதாக மாற்றிவிடுவார்களா?? நீட் தேர்வை ரத்து தான் செய்வார்களா?? அவர்களால் செய்யத்தான் முடியுமா?? மானியத் தொகைகள் வங்கி மூலமாக வரவாக்கப்படுவது நிறுத்தப்பட்டு, நேரடியாக பண வினியோகம், ஜிஎஸ்டி ரத்து... கேஸ் மான்யம் ஆதார் ரத்து... இப்படிப் பலவற்றை காங்கிரஸ் ஆட்சிக்கு ஒருவேளை வந்தால் செய்வார்களா?? அல்லது செய்யத்தான் முடியுமா?
Rate this:
Cancel
radha - tuticorin,இந்தியா
28-டிச-202111:16:38 IST Report Abuse
radha அய்யா கிருஷ்ணசங்கி நீ உண்மையிலேயே படிச்சி டாக்டர் பட்டம் வாங்கி இருந்தன்னா யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் க்கு சரியான அர்த்தம் சொல்லேன். நீ என்ன செய்வ வாங்குன எலும்பு துண்டுக்கு கொறைச்சுதாண ஆகனும்.
Rate this:
Sundaresan Palamadai Krishnan - Chennai,இந்தியா
28-டிச-202111:48:27 IST Report Abuse
Sundaresan Palamadai Krishnanஉங்குளுயுடைய பொது அறிவை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது....
Rate this:
Cancel
GOPALASAMY - bengaluru,இந்தியா
28-டிச-202111:09:17 IST Report Abuse
GOPALASAMY அப்போ கருணாநிதி ஏன் ஒன்றிய அரசு என சொல்லவில்லை ? அவருக்கு தெரிந்தது அவ்வளவுதானா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X