கொழும்பு : இலங்கையில், உள்ளூர் வாசிகளை திருமணம் செய்துகொள்ள விரும்பும் வெளிநாட்டினர், இலங்கை ராணுவ அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெறவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து, பல புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் சில சீர்திருத்தங்களுக்கு, எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன.இந்நிலையில், இலங்கை வாசிகளை மணம் முடிக்க விரும்பும் வெளிநாட்டினருக்காக அமல்படுத்தப்பட உள்ள ஒரு சட்டம், தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து, இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கை வாசிகளை, வெளிநாட்டினர் திருமணம் செய்துகொள்வதால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக, இலங்கை வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சக அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒரு சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இலங்கை நாட்டினரை மணம் முடிக்க விரும்பும் வெளிநாட்டினர்,இலங்கை ராணுவ அமைச்சகத்திடம் இருந்து, ஆட்சேபனை இல்லை என்பதற்கான சான்றிதழை பெறவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் மாவட்ட பதிவாளர் வாயிலாக மட்டுமே, இதுபோன்ற திருமணங்களை பதிவு செய்யும் வகையில், இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.இந்த புதிய சட்டம், வரும்ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த சட்டத்திற்கு, எதிர்க்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement