வந்துவிட்டது புதிதாக 2 தடுப்பு மருந்து: கோவோவாக்ஸ், கார்பெவாக்ஸ் மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி

Updated : டிச 28, 2021 | Added : டிச 28, 2021 | கருத்துகள் (3)
Advertisement
புதுடில்லி: கோவோவாக்ஸ், கார்பெவாக்ஸ் தடுப்பு மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், மோல்னுபிராவிர் என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மத்திய அரசு குடிமக்களை காக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தென்னிந்திய மாநிலங்களில் ஒமைக்ரான்
Health Ministry, Approves, 2 New Vaccines, One Drug, 2 தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள், அனுமதி, இந்தியா, சுகாதாரத்துறை

புதுடில்லி: கோவோவாக்ஸ், கார்பெவாக்ஸ் தடுப்பு மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், மோல்னுபிராவிர் என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மத்திய அரசு குடிமக்களை காக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தென்னிந்திய மாநிலங்களில் ஒமைக்ரான் தாக்கம் அதிகளவில் உள்ளதால் மாநில அரசுகள் இரவு ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றன. அதே சமயத்தில் 2 டோஸ் தடுப்பு மருந்து பெற்றவர்களுக்கு பாதுகாப்பு கருதி ‛பூஸ்டர் டோஸ்' போடுவதற்கும் படிப்படியாக அனுமதி வழங்கப்படவுள்ளது.


இந்தியாவில் மேலும் 2 தடுப்பூசிக்கு அனுமதி | India approves emergency use of COVID-19 Labs

latest tamil newsஇந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மானுஷ்க் மந்தவ்யா, புதிய தடுப்பூசிகள் குறித்து ஓர் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். கார்பெவாக்ஸ் மற்றும் கோவோவாக்ஸ் ஆகிய இரண்டு புதிய வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவசர தேவைக்காக மட்டுமே இந்த தடுப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.


latest tamil news


கார்பெவாக்ஸ் தடுப்பு மருந்து ஐதராபாத்தைச் சேர்ந்த பயலாஜிகல்-இ என்கிற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்பிடி புரத வகையைச் சேர்ந்த இந்த தடுப்பு மருந்து முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்ட், கோவாக்சினை அடுத்து இந்தியாவில் தயாராகும் மூன்றாவது தடுப்பு மருந்து இது என சுகாதாரத்துறை அமைச்சர் பெருமை தெரிவித்துள்ளார். இதுதவிர இந்தியாவைச் சேர்ந்த 13 மருத்துவ நிறுவனங்கள் மோல்னுபிராவிர் என்கிற வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUDHAKAR - Dublin,அயர்லாந்து
28-டிச-202120:36:02 IST Report Abuse
SUDHAKAR இது bayer college of medicine Huston மற்றும் dynavax american company இணைந்து தயாரித்த போர்முலா இது protein subunit vaccine இது ஹெபாடிட்டீஸ் பி தடுப்பு மருந்தின் இணையானது.
Rate this:
Cancel
Muthukumar - Tiruchengodu,இந்தியா
28-டிச-202117:03:21 IST Report Abuse
Muthukumar அவர்கள் பரிசோதிக்கவில்லை என்று உங்களுக்கு தெரியுமா. இந்தியாவில் தயாரிப்பதெல்லாம் சரியானது இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு. இதே மருந்தை அமெரிக்காவில் தயாரித்து இருந்தால் தலைமேல் வைத்து கொண்டாடி இருப்பீர்கள்.
Rate this:
Cancel
ArGu - Chennai,இந்தியா
28-டிச-202112:36:32 IST Report Abuse
ArGu ஸ்டார்ட்.....சரியான பரிசோதனை இல்லை.... அவசர கதியில் எடுத்த முடிவு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X