ஹைபிரிட் வாகனங்கள் தயாரிக்க ஆறு மாத அவகாசம்

Updated : டிச 28, 2021 | Added : டிச 28, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் காற்று மாசை குறைக்க, ஹைபிரிட் வாகனங்கள் தயாரிக்க வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தற்போது வாகன புகையை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது மத்திய போக்குவரத்து துறை ஹைபிரிட் வாகனங்கள் எனப்படும் பிஎஸ்-6 விதிக்கு கட்டுப்பட்ட வாகனங்களை
FlexFuel Vehicles, Hybrid Vehicles, 6 Months, Government, Asks, Automakers, Start Producing, ஹைபிரிட் வாகனங்கள், தயாரிப்பு, ஆறு மாதம், அவகாசம்

புதுடில்லி: இந்தியாவில் காற்று மாசை குறைக்க, ஹைபிரிட் வாகனங்கள் தயாரிக்க வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது வாகன புகையை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது மத்திய போக்குவரத்து துறை ஹைபிரிட் வாகனங்கள் எனப்படும் பிஎஸ்-6 விதிக்கு கட்டுப்பட்ட வாகனங்களை தயாரிக்க இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் கோரியுள்ளது. இதற்காக இந்த நிறுவனங்களுக்கு இன்னும் 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இதுகுறித்துப் பேசிய மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கிரீன்ஹவுஸ் வாயுக்கள் தாக்கத்தை இந்த ஹைபிரிட் வாகனங்கள் வெகுவாகக் குறைக்கும் என உறுதி அளித்துள்ளார். இதன்மூலமாக வரும் 2030ம் ஆண்டில் இந்தியாவில் கார்பன் புகை அளவை ஒரு பில்லியன் டன் குறைக்க இயலும். ஏற்கனவே இந்தியாவின் முன்னணி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தத் துவங்கிவிட்டன.

எப்.எப்.வி எனப்படும் இந்த ஹைபிரிட் வாகனங்கள் மின்சாரம் பெட்ரோல் ஆகிய இரண்டின் மூலமாகவும் இயங்கும் ஆற்றலைப் பெற்றது. இந்த வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம் உள்ளது. இதன்மூலமாக எதிர்காலத்தில் டில்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று மாசு குறையும் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ
28-டிச-202123:15:05 IST Report Abuse
Krishnan சூரியஒளி தகடுகள், மின்சார அடுப்புகள், மின்சார வாகனங்கள் போன்றவை தான் வருங்காலம்.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
28-டிச-202113:46:48 IST Report Abuse
Tamilan எப்படி பணத்தின் மதிப்பு இழந்தால் ஏறாதொ, ஏறிய விலைகள் இறங்காதோ அதேபோல் எரிய மாசும் இறங்காது . ஏதாவது அரசியல் சட்ட நாடகங்கள் மட்டுமே நடந்துகொண்டிருக்கும் .
Rate this:
Kumar - Madurai,இந்தியா
28-டிச-202115:27:53 IST Report Abuse
Kumarஇன்னும் 100 வருசத்துல பெட்ரோல் கிடைக்காது அப்ப என்ன செய்ய முடியும்? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X