செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்களில் ஆட்டமிழந்தது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. செஞ்சுரியனில், முதல் டெஸ்ட் ( கிறிஸ்துமஸ் மறுநாள் 'பாக்சிங் டே' என அழைக்கப்படுகிறது) நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 272 ரன் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் (122), அஜின்கியா ரகானே (40) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் லுங்கிடி 3 விக்கெட் வீழ்த்தினார். 2வது நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.

3வது நாள் ஆட்டம் இன்று துவங்கிய நிலையில், ராகுல்123 ரன்னிலும், ரகானே 48 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். ரிஷாப் பன்ட் , முகமது ஷமி தலா 8, அஸ்வின், ஷர்துல் தாக்கூர் தலா 4 ரன்னிலும், பும்ரா 14, ஷிராஜ் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென் ஆப்ரிக்க அணி சார்பில் நிகிடி 6, ரபாடா3, ஜான்சன் 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE