அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக அதிகரிப்பு; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Updated : டிச 28, 2021 | Added : டிச 28, 2021 | கருத்துகள் (34)
Advertisement
சென்னை: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவீதம் உயர்த்தி வரும் ஜன.,1-ம் தேதி
TamilnaduCM, Stalin, DA, Increased, Pongal Gift, தமிழகம், முதல்வர், ஸ்டாலின், அகவிலைப்படி உயர்வு, பொங்கல் பரிசு, உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவீதம் உயர்த்தி வரும் ஜன.,1-ம் தேதி முதல் 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக அரசுக்கு ஆண்டொன்றிற்கு தோராயமாக ரூ.8,724 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.


14% DA உயர்வு அரசு ஊழியர் சம்பளம் எவ்வளவு கூடும்? ,,,,,,,

latest tamil news



மேலும், பொங்கல் பரிசாக ‛சி' மற்றும் ‛டி' பிரிவு பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 வழங்கிடவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.500 வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக அரசுக்கு தோராயமாக ரூ.169.56 கோடி அளவிற்கு செலவினம் ஏற்படும். தமிழக அரசுக்கு நிதிச்சுமை உள்ள இந்த சூழ்நிலையிலும் இந்த உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyanasundaram Linga Moorthi - Accra,கானா
29-டிச-202115:24:17 IST Report Abuse
Kalyanasundaram Linga Moorthi whoever elected dmk, suffer this and more for the balance of their term
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-டிச-202108:46:06 IST Report Abuse
Kasimani Baskaran பணம் இருக்கிறதோ இல்லையோ அதை டக்ளஸ் பார்த்துக்கொள்வார்... ஊராட்சி அரசுக்கு நோட்டடிக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.
Rate this:
Cancel
29-டிச-202107:07:18 IST Report Abuse
ராமகிருஷ்ணன் பாவம் அரசு ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் லஞ்ச பிச்சை எடுத்து வாழ்ந்து வருகின்றனர்.மற்றும் தேர்தல்களில் திமுக வெற்றி பெற பற்பல தில்லாலங்கடி வேலை செய்கின்றனர். அதற்கு கூலியாக இந்த ஊதிய உயர்வு, மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X