சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ராகுலுக்கு நன்றி சொல்லலாம்!

Added : டிச 28, 2021 | கருத்துகள் (1)
Advertisement
ராகுலுக்கு நன்றி சொல்லலாம்!எஸ்.மணி, வடக்கூர், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சூரியன் வருவது யாராலே? சந்திரன் தெரிவது யாராலே...' என்பது,காங்., ஆட்சி காலத்தில், ஒன்றாம் வகுப்புக்கான, 'பொங்கல் தமிழ் வாசகம்' என்ற பாடத்தில் இடம் பெற்ற பாடல். அதற்கான விடை, கடவுளால்.சரி... அதற்கென்ன இப்போது என்று வினவத் தோன்றுகிறதா?காங்., - எம்.பி.,
இது உங்கள் இடம்


ராகுலுக்கு நன்றி சொல்லலாம்!எஸ்.மணி, வடக்கூர், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சூரியன் வருவது யாராலே? சந்திரன் தெரிவது யாராலே...' என்பது,
காங்., ஆட்சி காலத்தில், ஒன்றாம் வகுப்புக்கான, 'பொங்கல் தமிழ் வாசகம்' என்ற பாடத்தில் இடம் பெற்ற பாடல். அதற்கான விடை, கடவுளால்.சரி... அதற்கென்ன இப்போது என்று வினவத் தோன்றுகிறதா?காங்., - எம்.பி., ராகுல், 'பூஸ்டர் டோஸ்களை மக்களுக்கு செலுத்த வேண்டும் என, நான் விடுத்த பரிந்துரையை, மத்திய அரசு ஏற்றுள்ளது. மக்கள் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் கிடைக்க வேண்டும்' என திருவாய் மலர்ந்துள்ளார்.அன்னாரது இந்த அறிக்கையை படித்ததும் அழுவதா அல்லது சிரிப்பதா என்று ஒரே குழப்பமாக இருக்கிறது.

சூரியன் உதிப்பதற்கும், சந்திரன் தெரிவதற்கும் யாரும் உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை. இயற்கையின் சுழற்சிப்படி, அவை தானாகவே நிகழும். அது போல அரசின் சில நடவடிக்கைகள், தானே இயல்பாக நடப்பவை. அதற்கு யாரும் அனுமதியோ, உத்தரவோ பிறப்பிக்க தேவை இல்லை.
இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி விவகாரமும் அப்படிப்பட்ட ஒன்று தான்.தடுப்பூசி எண்ணிக்கையை பொறுத்து, அதற்கேற்றவாறு அவை ஒவ்வொரு மாநிலத்திற்கும், மத்திய அரசால் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நடைமுறைக்கு பிரதமரின் உத்தரவோ, நிதி மந்திரியின் சிபாரிசோ, உள்துறை அமைச்சரின் அனுமதியோ, ராகுலின் பரிந்துரையோ தேவையேயில்லை!
'என் பரிந்துரையை ஏற்றுத் தான் மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை, மத்திய அரசு போடுகிறது' என்று ராகுல் பெனாத்துவதை என்னவென்று சொல்வது?நல்ல வேளை... 'நான் பரிந்துரைத்ததால் தான் சூரியன் உதிக்கிறது' என்று சொல்லாமல் இருக்கிறாரே; அது வரைக்கும், ராகுலுக்கு நன்றி சொல்லலாம்.


அதிகாரிகளையும் கைது செய்யுங்கள்!வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எவ்வளவு, 'சுருட்ட' முடியும் என கணக்கு போட்ட பின் தான், ஆட்சியாளர்கள் திட்டங்களை அறிவிக்கின்றனர். அவர்களுடன் கூட்டணி அமைத்து, அரசு அதிகாரிகளும் ஊழலில் ஈடுபடுகின்றனர்.
இதற்கு, வேலுார் அரசு பொறியாளர் ஷோபனா ஒரு முன்னுதாரணமாக உள்ளார். அவரிடம் இருந்து, 2.28 கோடி ரூபாய் ரொக்கமாக கைப்பற்றியுள்ளனர், லஞ்ச ஒழிப்பு துறையினர்.
பெரும் ஊழலில் ஈடுபட்டிருந்த போதும் அவரை கைது செய்ய, கடந்த ஆளுங்கட்சி தயங்கியது. எதிர்க்கட்சிகள்கேள்வி எழுப்பிய பின் தான், அவர் கைது செய்யப்பட்டார்.ஆட்சி மாறினாலும், ஊழல் அதிகாரிகளுக்கு ஆளுங்கட்சி துணையாக இருப்பது தொடர்கிறது.இந்த ஊழல், உட்புகாத துறைகளே இல்லை. அதிலும் வருவாய், நெடுஞ்சாலை, பொதுப்
பணித் துறைகளில் லஞ்சம் கொடிக்கட்டி பறக்கிறது.

அவற்றின் சார்பாக கட்டப்படும் கட்டடம், பாலம், சாலை அனைத்தும், தரமின்றி தான் உருவாக்கப்படும். திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில், பாதிக்கு மேல், 'கமிஷன்' என்ற பெயரில், மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
உதாரணமாக கடந்த ஆட்சியில், விழுப்புரம் மாவட்டத்தில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது நாம் அறிந்ததே.இந்த ஊழல், குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் வரை உட்புகுந்து, அவ்வப்போது உயிர்பலி வாங்கி வருகிறது.கடந்த 2004 ஜூலையில்நடந்த கும்பகோணம் தீ விபத்தில், 94 குழந்தைகள் கருகியதை மறக்க முடியுமா?கடந்த 2012 ஜூலையில்,பள்ளி பேருந்து ஓட்டையில் விழுந்து, சிறுமி ஸ்ருதி உயிர் இழந்தார்.
பள்ளியில் நடக்கும் விபத்துகள், அதிகாரிகளின் அலட்சியத்தால், ஊழலால் நிகழ்ந்தவை; நிகழ்பவை!தற்போது நெல்லையில், தனியார் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து, மூன்று சிறுவர்கள் பலியாகி உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு, அந்த பள்ளியில் ஆய்வு நடத்திய கல்வித் துறை அதிகாரிகள் தான் முதல் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.தனியார் பள்ளி உரிமையாளர்களை மிரட்டி, கல்வித் துறை அதிகாரிகள் பணம் பறிப்பது நடைமுறையில் உள்ளது.நெல்லை சம்பவத்தில் பள்ளி தலைமை ஆசிரியர், தாளாளர் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களும், முக்கிய குற்றவாளிகள் தான் என்றாலும், பள்ளியை ஆய்வு செய்த அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்.


பட்டம் சூட்டிய அறிவு!-பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜெருசலத்தில் நடந்த, 'மிஸ் யுனிவர்ஸ்' அழகிப் போட்டியில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து முதலிடத்தை பெற்றுள்ளார். இது, நம் நாட்டிற்கு பெருமைச் சேர்த்துள்ளது.கடந்த, 1994ல் சுஷ்மிதா சென்னும், 2000ல் லாரா தத்தாவும், மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றனர். 21 ஆண்டுகளுக்கு பின், ஹர்னாஸ் அப்பட்டத்தை சூடியுள்ளார்; அவருக்கு பாராட்டுகள்!அப்போட்டியில், 80 பேர் பங்கேற்றுள்ளனர். அதில் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி முதல் மூன்று பேருக்குள் ஒருவராக ஹர்னாஸ் தேர்வாக காரணம், காலநிலை மாற்றம் குறித்த அவரின்
பதில் தான்!'காலநிலை மாற்றம் உண்மை. இயற்கை படும் இன்னலை பார்க்கும்போது இதயம் நொறுங்குகிறது. 'நம் மோசமான நடவடிக்கை தான் இதற்குகாரணம். நாம் செயலில் இறங்க வேண்டும். கால நிலை மாற்றம் ஏற்பட்ட பின், அதை சரி செய்வதைக் காட்டிலும், முன்
கூட்டியே தடுப்பதே சிறப்பானது...'-இவ்வாறு அவர் கூறி,'அப்ளாஸ்' வாங்கி இருக்கிறார்.அடுத்த கேள்வியையும், அவர் அழகாக எதிர் கொண்டிருக்கிறார். அந்தப் பதில் தான் அவரை, மிஸ் யுனிவர்ஸ் பட்டம் சூட்டியது.'இளம் பெண்கள் இன்றைய சூழலில் எதிர்கொள்ளும் அழுத்தத்திற்கு எந்த மாதிரியான அறி
வுரையை வழங்குவீர்கள்?' என்ற கேள்விக்கு, ஹர்னாஸ் அளித்த அசத்தலான பதில் இது தான்...'இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் அழுத்தம் என்பதே, அவர்கள் தங்களை நம்பாதது தான். சுய நம்பிக்கை அவசியம். நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர் என்பதை நம்ப வேண்டும். அதுவே உங்களை அழகாக்கும்; பிறரோடு, உங்களை ஒப்பிடாதீர்.
'உங்களுக்காக, நீங்களே பேசுங்கள். ஏனெனில் உங்கள் வாழ்க்கையின் தலைவர், நீங்கள் தான். நான், என்னை நம்புகிறேன்;அதனால் தான் நான் இங்கே நிற்கிறேன்...'-இவ்வாறு, நம் அழகி கூறி, நடுவர்கள் மனதை அள்ளியிருக்கிறார். நம் நாட்டு இளம்பெண்கள், ஹர்னாஸ் கூற்றை மெய்ப்பிக்க வேண்டும். 21 வயதே நிரம்பிய, முதுகலை மாணவியாகிய அவரை, இன்று உலகம் கொண்டாடக் காரணம், அழகுடன் இணைந்த, மெச்சத்தகுந்த அறிவும் தான்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
29-டிச-202119:29:03 IST Report Abuse
D.Ambujavalli வெறும் பூச்சு, உடைகளும் மட்டுமின்றி, நல்ல அறிவார்ந்த பேச்சுக்கள், தேர்வுகளாலும் தான் அழகிப்போட்டியில் வெல்ல முடியும் என நிரூபித்த அவருக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X