சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : டிச 28, 2021 | |
Advertisement
புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை: தமிழகமே, 'கவ் பெல்ட்' எனப்படும், பசுவை புகழும் மாநிலம் தான். ஏன், இந்தியாவே அப்படித் தான். 90 சதவீத தமிழர்கள் பசுவை வணங்குவதை பாரம்பரியமாக கொண்டவர்களே. அது மதம் என்பதை விட 'வாழ்வியல் முறை' என்பதே நிதர்சனம்.நீங்க புரிஞ்சிக்கிட்டீங்க... மத்தவங்களுக்கு புரியலியே!பா.ஜ., தேசிய சிறுபான்மையினபிரிவின் தேசிய



பேச்சு, பேட்டி, அறிக்கை

புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை: தமிழகமே, 'கவ் பெல்ட்' எனப்படும், பசுவை புகழும் மாநிலம் தான். ஏன், இந்தியாவே அப்படித் தான். 90 சதவீத தமிழர்கள் பசுவை வணங்குவதை பாரம்பரியமாக கொண்டவர்களே. அது மதம் என்பதை விட 'வாழ்வியல் முறை' என்பதே நிதர்சனம்.நீங்க புரிஞ்சிக்கிட்டீங்க... மத்தவங்களுக்கு புரியலியே!



பா.ஜ., தேசிய சிறுபான்மையினபிரிவின் தேசிய செயலர் இப்ராஹிம் பேச்சு:
'பிரதமர் மோடியே திரும்பி போ' என கோஷமிட்டவர்கள், இன்றைக்கு 'பிரதமர்மோடியே வருக' என்று அழைக்கக்கூடிய மாற்றத்தை மோடி அரசு உருவாக்கி இருக்கிறது.நீங்கள் சொல்வது சரி தான்... ஆனால், கவுரவ பிரச்னை காரணமாகவும், எதிர்மறை எண்ணங்களை பகிர்ந்தால் எளிதில் புகழ்பெற்று விடலாம் என்பதால், இதை ஏற்றுக் கொள்ள பலரும் மறுக்கின்றனரே!


த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:
'ஆயுள் தண்டனை முடிந்தும், நீண்ட காலமாக சிறையில் வாடுவோரை, ஆட்சிக்கு வந்ததும் விடுதலை செய்வோம்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. அதை நம்பிய முஸ்லிம்கள் ஓட்டளித்து, தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அவ்வாறு செய்யவில்லை.எதிர்க்கட்சியாக இருந்தபோது, 'எல்லா விஷயங்களையும் கையாளுவது எளிது' என நினைத்தவர்களுக்கு, ஆட்சியில் அமர்ந்த பின் தான், பிரச்னைகளின் உண்மை உருவமும், அதைத் தீர்ப்பதற்கு எழும் சட்ட சிக்கல்களும் புரிகின்றன... என்ன செய்வது!



மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை:
தமிழக அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்குவதற்கான சிறப்பு திட்டத்தை, தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். இதனால், நீர்நிலைகளில் எதிர்பாராத மரணங்களை தடுப்பதுடன், மாணவர்களுக்கு உடல்நலமும், உறுதியும் கிடைக்கும்.நீதி போதனை வகுப்பையே நடத்த இன்னும் எந்த முன்னெடுப்பும் இல்லை; அது குறித்து நீங்கள் ஏன் சார் பேசவில்லை?



அ.ம.மு.க., பொதுச் செயலர்தினகரன் அறிக்கை:
எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால், 'ஒமைக்ரான்' பரவும் என்று தடை போட்ட தி.மு.க., அரசு, உதயநிதி ஸ்டாலினுக்காக கோவையில் கூட்டப்பட்ட கூட்டத்தை பார்த்து கண்களை மூடிக் கொண்டதா; 'எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும் தான் ஒமைக்ரான் பரவும்' என்று தி.மு.க., அரசுக்கு உலக மகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பரோ?தி.மு.க., கண்ணை மூடிக் கொள்வது இருக்கட்டும்... கூட்டத்தை கூட்டி தான் அஞ்சலி செலுத்தணுமா? வீட்டிலேயே அஞ்சலி செலுத்த குறிப்பிட்ட நேரத்தை குறித்திருக்கலாமே!


நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
: 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம்களையும், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழகத்தின் முதன்மையான நகரங்களில், தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம்.உங்களை போன்றவர்களை விளம்பரப்படுத்தி கொள்ளவும், அவர்கள் பெயரில் விளம்பரம் தேடவும் இந்த விவகாரத்தை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பது மட்டும் நிஜம்!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X