மூன்றாவது ஊரடங்கு வந்தால், அதை எதிர்கொள்வதற்கான வழிகளை கூறும், சிறு தொழில் ஆலோசகர் கேசவ பாண்டியன்: கொரோனா பரவல் இரண்டாவது முறையாக உலகம் முழுக்கப் பரவியபோது, ஜப்பான், பெலாரஸ், ஸ்வீடன், தென் கொரியா, அமெரிக்காவின்பல மாகாணங்களில் ஊரடங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.ஆனால், நாடு முழுதும் ஊரடங்கு கொண்டு வந்தும், நம்மால் தொற்று பரவலையோ, உயிரிழப்பையோ தடுக்க முடியவில்லை. பல லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது தான் மிச்சம். இனி மீண்டும் ஊரடங்கு வந்தால், நிச்சயமாக மிகப் பெரிய பாதிப்பு உண்டாகும். எனவே, ஊரடங்கு நடவடிக்கை எடுக்காமல், அதற்கான மாற்றுத்தீர்வுகளை மட்டுமே அரசு முன்னெடுக்க வேண்டும்.ஒருவேளை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்து, ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், எல்லா ஊர்களிலும் ஒரே நேரத்தில் கடை அடைப்பு என்ற முடிவை எடுக்காமல், 'மைக்ரோ பிளாக்கிங்' செய்யலாம்.இதன் மூலம் ஒரு பெரிய பகுதியே அடைப்புக்குள் வராமல், அதன் ஒரு பகுதி மட்டுமே அடைப்புக்கு உள்ளாகி, பாதிப்பில் இருந்து தப்பிக்கும். இதனால் அந்தப் பகுதியில் இருக்கும் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து தொழில் செய்து சம்பாதிக்க முடியும்.பொதுவாக பெருந்தொற்று காலங்களில் கூட்டங்களை தவிர்ப்பதே ஊரடங்கின் முதல் நோக்கம். எனவே, கூட்டங்களை குறைக்கும் மாற்று வழிமுறைகளை தொழில் நிறுவனங்கள் செயல்படுத்தினாலே ஊரடங்கிற்கு அவசியம் இருக்காது.நகைக்கடை, ஜவுளிக்கடை என, எதுவாக இருந்தாலும், அந்த கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த, 'டோக்கன்' முறையை கொண்டு வரலாம். ஒரு மணி நேரத்தில் இவ்வளவு பேர் என, 'பர்சேஸ்' செய்ய அனுமதி தரலாம்.டோக்கனை 'ஆன்லைன்' மூலம் 'ரிஜிஸ்டர்' செய்தும் பெறலாம். நேரில் வந்தும் வாங்கலாம் என்ற நிலை இருந்தால், வியாபார நிறுத்தம் தேவை இருக்காது.ஊரடங்கு இருந்த காலத்தில் உணவகங்களே பிரத்யேக செயலியை உருவாக்கி, அதன் மூலம் 'ஆர்டர்'களை எடுத்து 'டெலிவரி' செய்தன. இந்த நடைமுறையை எல்லா உணவகங்களும் பின்பற்ற, அரசு ஊக்குவிக்க வேண்டும்.கொரோனா காலத்தில் அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி போன்றவற்றை வண்டிகளில் வீடுகளுக்கு கொண்டு சென்று விற்க அரசு அனுமதி அளித்தது. இந்த நடைமுறையை அனைத்து 'ரீடெய்ல்' நிறுவனங்களும் பின்பற்றலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE