மதுரையிலிருந்து கிசான் கிசான் ரயில்களை இயக்க கோரிக்கை

Added : டிச 29, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
மதுரை:விவசாயிகளின் விளை பொருட்களை சலுகை கட்டணத்தில் கொண்டு செல்ல கிசான் ரயில்களை இயக்க வேண்டும் என தென் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.வடமாநிலங்களில் விவசாய விளைபொருட்களை ஏற்றி செல்ல கிசான் ரயில்களை கடந்தாண்டு ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. உருளைகிழங்கு, வெங்காயம், தக்காளி உள்ளிட்ட விளைபொருட்களை கொண்டு செல்ல 50 சதவீதம் கட்டண சலுகையும்

மதுரை:விவசாயிகளின் விளை பொருட்களை சலுகை கட்டணத்தில் கொண்டு செல்ல கிசான் ரயில்களை இயக்க வேண்டும் என தென் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வடமாநிலங்களில் விவசாய விளைபொருட்களை ஏற்றி செல்ல கிசான் ரயில்களை கடந்தாண்டு ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. உருளைகிழங்கு, வெங்காயம், தக்காளி உள்ளிட்ட விளைபொருட்களை கொண்டு செல்ல 50 சதவீதம் கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலிருந்து நெல், தேங்காய், முருங்கை, கத்திரி உள்ளிட்ட காய்கறிகள், தயிர், மல்லிகை போன்றவை அதிகளவில் வடமாநிலங்களுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் கால, பொருளாதார விரையம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க கிசான் ரயில்களை இயக்கினால் வசதியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.இதற்கடையில் இந்த விளைபொருட்கள் பட்டியலில் தேங்காய் இடம் பெற செய்ய வேண்டும் என தேங்காய் ஏற்றுமதியாளர்கள் மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: உரித்த தேங்காய்கள் சாலை வழியாக புனே, மும்பை அமராவதி, நாக்பூர், சூரத், ராஜ்கோட், இந்தோர், ஜோத்பூர் போன்ற இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. எனவே கிசான் ரயிலில் அனுப்பப்படும் விளைபொருட்கள் பட்டியலில் தேங்காயை சேர்க்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Hariharan - Hyderabad,இந்தியா
29-டிச-202109:36:55 IST Report Abuse
R Hariharan அதுபோல் தேனீ, போடிநாயக்கனுர் போன்ற இடலங்களிலிருந்து பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ், கிஷன் கிஷன் ரயில்கள் இயக்க வேண்டும்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X