எங்களுக்கு வந்தால் ரத்தம்; அவர்களுக்கு தக்காளி சட்னியா?

Updated : டிச 29, 2021 | Added : டிச 29, 2021 | கருத்துகள் (14)
Advertisement
சென்னை :'தி.மு.க.,வின் செயல்பாடுகளை பார்க்கும் போது, அ.தி.மு.க., செய்தால் ரத்தம்; தி.மு.க., செய்தால் தக்காளி சட்னி என்ற நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கடந்த 2002 - 2003 பட்ஜெட் கூட்டத்தில், 'விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும். விவசாயிகளுக்காக எவ்வளவு மின்சாரம்
ரத்தம்;  தக்காளி சட்னி?

சென்னை :'தி.மு.க.,வின் செயல்பாடுகளை பார்க்கும் போது, அ.தி.மு.க., செய்தால் ரத்தம்; தி.மு.க., செய்தால் தக்காளி சட்னி என்ற நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:கடந்த 2002 - 2003 பட்ஜெட் கூட்டத்தில், 'விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும். விவசாயிகளுக்காக எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக, மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன' என, முதல்வராக இருந்த ஜெயலலிதா தெரிவித்தார்.


latest tamil news




எனினும், அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்து போராட்டம் நடத்தின. அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். அவர் இன்று முதல்வராக உள்ள நிலையில், தி.மு.க., எதை எதிர்த்ததோ, அது செயல்பாட்டுக்கு வருகிறது.

கடந்த செப்டம்பரில், ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை வழங்கிய முதல்வர், அதை மிகப்பெரிய சாதனையாக பேசினார். ஆனால், மீட்டர் பொருத்தப்படுவது குறித்து வாய் திறக்கவில்லை. இன்றைக்கு அந்த இணைப்புகளில் மீட்டர் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதுவரை இல்லாத இணைப்புகளிலும், மீட்டர் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து மின் வாரிய அதிகாரிகள், 'விவசாயத்திற்கு கட்டணம் வசூலிக்க மீட்டர் பொருத்தப்படவில்லை. எவ்வளவு மின் பயன்பாடு உள்ளது என்பதை அறியத்தான்' என்று கூறியுள்ளனர். இதைத் தான் ஜெயலலிதா அன்று சொன்னார்.'அ.தி.மு.க., செய்தால் ரத்தம்; தி.மு.க., செய்தால் தக்காளி சட்னி' என்ற நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது.இவ்வாறு பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
29-டிச-202113:02:17 IST Report Abuse
raja இப்போ நீங்க சொல்லுங்க இந்த விடியல் அதிமுக சொல்லறத்தை தான் செய்யிறான்னு....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
29-டிச-202110:43:55 IST Report Abuse
duruvasar நேற்று தனியார் தொலைக்காட்சி பேட்டியில் வந்த பாரதியாரின் கண்ணன் பாட்டான "கேட்பதை கொடுப்பவனே மோடி மோடி, எங்கள் தோழன் மோடியண்ணா எங்கள் கண்ணா என்று" பாடலை கேட்டு மகிழுங்கள்
Rate this:
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
29-டிச-202110:12:27 IST Report Abuse
ganesha இது வாடிக்கை தானே. எதிர்கட்சியா இருக்கும்போது ஒன்னு பேசறது. ஆளும் காட்சியானப்பறம் அதை மாத்தி பேசறது தானே வழக்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X