போலி சாமியார் அன்னபூரணி மீது ஹிந்து அமைப்புகள் போலீசில் புகார்

Updated : டிச 29, 2021 | Added : டிச 29, 2021 | கருத்துகள் (57) | |
Advertisement
சென்னை :'மத நம்பிக்கையை இழிவுப்படுத்தும் போலி சாமியார் அன்னபூரணி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை அம்பத்துாரை சேர்ந்தவர் சிவமுருகன் ஜி. இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்:அன்னபூரணி அரசு என்ற பெண் தான் கடவுளின் அவதாரம்; அன்னை ஆதிபராசக்தி என பிரகடனப்படுத்தி வருகிறார். இது தொடர்பான
பெண் சாமியார் அன்னபூரணி ,ஹிந்து அமைப்புகள் போலீசில் புகார்

சென்னை :'மத நம்பிக்கையை இழிவுப்படுத்தும் போலி சாமியார் அன்னபூரணி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அம்பத்துாரை சேர்ந்தவர் சிவமுருகன் ஜி. இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்:அன்னபூரணி அரசு என்ற பெண் தான் கடவுளின் அவதாரம்; அன்னை ஆதிபராசக்தி என பிரகடனப்படுத்தி வருகிறார். இது தொடர்பான வீடியோக்கள் 'யூ டியூப்'பில் பரவுகின்றன.
தன்னை கடவுளின் அவதாரம் என கூறும் அன்னபூரணி ஏற்கனவே 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.



தன் கணவரோடு சேர்ந்து வாழ முடியாது; வேறு பெண்ணின் கணவரான அரசு என்பவருடன் தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார். தனிமனித ஒழுக்கமின்றி தகாத உறவு குறித்து பொது வெளியில் பேசி அதன்படி நடந்தவர் அன்னபூரணி.
இவர் தற்போது கடவுளின் பெயரால் ஹிந்து மக்களை ஏமாற்றி மூளைச்சலவை செய்து வருகிறார். இவர் மீது மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்துதல் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சி செய்தல் மதத்தை மையப்படுத்தி குற்றத்தில் ஈடுபடுதல் உள்நோக்கத்தோடு
தவறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



இதேபோல பாரத் முன்னணி ராஷ்ட்ரிய சனாதன தர்ம சங்கம் வீர தமிழர் இந்து சேனா தமிழ்நாடு இந்து சேவாசங் அமைப்பு நிர்வாகிகளும் அன்னபூரணி மீது போலீசில் புகார்
அளித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
31-டிச-202115:47:53 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இந்து அமைப்புகள், திருமாவளவன் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? திமுக அரசு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
Rate this:
Cancel
29-டிச-202116:12:45 IST Report Abuse
ஆரூர் ரங் இது பொதுமக்கள் பிரச்சினைகளை திசை திருப்ப திராவிஷக்கூட்டம் 😡 பெரிதுபடுத்திய செய்தி இது. அன்னபூரணிக்கு மனதுக்குள் Jr கட்டுமரம் நன்றி சொல்லிக் கொண்டேயிருக்கும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
29-டிச-202114:33:39 IST Report Abuse
sankaseshan Miller ரொம்ப சௌண்டு விடாதே முதலில் உன் அழுக்கை துடைச்சுக்கோ மத்தவங்களை பற்றி அப்புறமா பேசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X