சென்னை :'மத நம்பிக்கையை இழிவுப்படுத்தும் போலி சாமியார் அன்னபூரணி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அம்பத்துாரை சேர்ந்தவர் சிவமுருகன் ஜி. இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்:அன்னபூரணி அரசு என்ற பெண் தான் கடவுளின் அவதாரம்; அன்னை ஆதிபராசக்தி என பிரகடனப்படுத்தி வருகிறார். இது தொடர்பான வீடியோக்கள் 'யூ டியூப்'பில் பரவுகின்றன.
தன்னை கடவுளின் அவதாரம் என கூறும் அன்னபூரணி ஏற்கனவே 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
தன் கணவரோடு சேர்ந்து வாழ முடியாது; வேறு பெண்ணின் கணவரான அரசு என்பவருடன் தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார். தனிமனித ஒழுக்கமின்றி தகாத உறவு குறித்து பொது வெளியில் பேசி அதன்படி நடந்தவர் அன்னபூரணி.
இவர் தற்போது கடவுளின் பெயரால் ஹிந்து மக்களை ஏமாற்றி மூளைச்சலவை செய்து வருகிறார். இவர் மீது மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்துதல் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சி செய்தல் மதத்தை மையப்படுத்தி குற்றத்தில் ஈடுபடுதல் உள்நோக்கத்தோடு
தவறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல பாரத் முன்னணி ராஷ்ட்ரிய சனாதன தர்ம சங்கம் வீர தமிழர் இந்து சேனா தமிழ்நாடு இந்து சேவாசங் அமைப்பு நிர்வாகிகளும் அன்னபூரணி மீது போலீசில் புகார்
அளித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE