புதுடில்லி :'இந்திய விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் நம் நாட்டு இசையை ஒலிபரப்ப வேண்டும்' என, விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
விமான போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான ஜோதிராதித்ய சிந்தியாவை, டில்லியில் உள்ள இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் தலைவர் வினய் சஹஸ்ரபுத்தேவை சமீபத்தில் சந்தித்தார். அப்போது இந்திய விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் நம் நாட்டின் இசையை ஒலிபரப்புவதை ஊக்குவிக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார்.
![]()
|
இதையடுத்து இந்தியாவில் செயல்படும் அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் நேற்று கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:உலகின் பெரும்பாலான விமான நிறுவனங்களின் விமானங்களில் அவை சார்ந்த நாட்டின் இசை ஒலிபரப்பாகிறது. உதாரணமாக அமெரிக்க விமானங்களில் ஜாஸ், ஆஸ்திரேலியாவில் மொஸார்ட், மத்திய கிழக்கு நாடுகளில் அரேபிய இசை ஒலிபரப்பாகின்றன. ஆனால் இந்திய விமான நிறுவனங்கள் எப்போதாவது மட்டுமே நம் இசையை ஒலிபரப்புகின்றன.
நம் இசைக்கு வளமான பாரம்பர்யம் மற்றும் கலாசாரம் உள்ளது. நம் இசையால் நாம் பெருமைப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம். நாட்டின் பன்முகத்தன்மையால் பாரம்பரிய இசை, நாட்டுப்புற இசை, கருவி இசை என, அது பல வடிவங்களை கொண்டுள்ளது. மக்களின் சமூக மற்றும் மத ரீதியான வாழ்வின் ஒரு பகுதியாகவும் அமைந்துஉள்ளது.எனவே இந்திய விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் நம் இசையை ஒலிபரப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE