சென்னை : 'ஒமைக்ரான்' பரவலால் திரைப்படங்கள் வெளியீடு மீண்டும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா தாக்கத்திற்கு பின் இரண்டு ஆண்டுகளாக முடங்கியிருந்த திரையுலகம், தீபாவளி முதல் தான் படிப்படியாக முன்னேறி வருகிறது. பொங்கலை முன்னிட்டு நீண்ட நாள் எதிர்பார்ப்பில் இருந்த அஜித் நடித்த 'வலிமை' பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.
டில்லியில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த பள்ளிகள், தியேட்டர்கள், உடற்பயிற்சி மையங்களை மூட அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளனர்.
இதனால், புதிய திரைப்படங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான தியேட்டர்கள் மூடப்பட்டு வசூல் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டால், புதுப்படங்கள் வெளியீட்டை தள்ளி வைக்கும் சூழல் உருவாகும் என்கிறது தமிழ் திரையுலகம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE