கடலுார் ; கடலுார் மத்திய சிறையில், கழுத்தை அறுத்துக்கொண்டு ஆயுள் தண்டனை கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நாகை மாவட்டம், கரியபட்டிணத்தை சேர்ந்தவர் அன்பழகன், 52; கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.நேற்று மதியம் அவர், பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரது கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சக கைதிகள் சிறை வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, அவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கைதி தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.