டிராக்டர் ஏற்றி விவசாயி படுகொலை; சேத்தியாத்தோப்பு அருகே பயங்கரம்

Added : டிச 29, 2021 | |
Advertisement
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அருகே, நிலப் பிரச்னை காரணமாக, விவசாயியை டிராக்டர் ஏற்றி படுகொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த சக்திவிளாகத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன், 55; கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர். பரமசிவம், 55; விவசாயி. ராஜேந்திரனின் வயல் வழியாகதான் பரமசிவத்தின் வயலுக்கு செல்ல முடியும். கடந்த 5


சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அருகே, நிலப் பிரச்னை காரணமாக, விவசாயியை டிராக்டர் ஏற்றி படுகொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த சக்திவிளாகத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன், 55; கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர். பரமசிவம், 55; விவசாயி. ராஜேந்திரனின் வயல் வழியாகதான் பரமசிவத்தின் வயலுக்கு செல்ல முடியும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டிருந்த ராஜேந்திரனின் வயல் வழியாக, பரமசிவன் மகன் ஸ்ரீதர் டிராக்டர் ஓட்டி சென்றதால், அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்தது.

இதனிடையே, அந்த வயலின் அருகில் உள்ள ராஜன் என்பவரின் நிலத்தை ரூ. 1 லட்சத்திற்கு கடந்தாண்டு ராஜேந்திரன் போக்கியத்திற்கு எடுத்தார். இதனால், அவருக்கும் பரமசிவத்திற்கும் இடையே காழ்ப்புணர்ச்சி காரணமாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. 2 நாட்களுக்கு முன், பரமசிவம் வீட்டிற்கு எதிரில் உள்ள காளியம்மன் கோவிலில் ராஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அங்கு வந்த பரமசிவம், இங்கு அமர்ந்து பேசக்கூடாது என கூறியதால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஊர்க்காரர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், ராஜேந்திரன் தனது ஆதரவாளர்கள் விவசாயி ராமதாஸ், 43, மற்றும் ரவி, அரிகிருஷ்ணன், சுப்ரமணியன் ஆகியோருடன் காளியம்மன் கோவிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அங்கு வந்த பரமசிவம் மற்றும் அவரது ஆதரவாளர் மகாராஜன், 65, ஆகியோர் 'எத்தனை தடவை சொன்னாலும் கேட்காமல் இங்கு வந்து ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்...' என கேட்டு, ஆபாசமாக திட்டினர்.அப்போது, பரமசிவம் மகன் ஸ்ரீதர், 24, அருகில் நிறுத்தியிருந்த டிராக்டரை ஓட்டிவந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதினார். இதில் ராஜேந்திரன், ரவி, அரிகிருஷ்ணன் ஆகியோர் துள்ளிக்குதித்து தப்பினர். ராமதாஸ் மட்டும் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி மயங்கினார்.

ஸ்ரீதர் விடாமல் டிராக்டரை பின்னுக்கு இயக்கி வந்து மீண்டும் மோதியதில் ராமதாஸ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அப்போது, ஓடி வந்து ராமதாசை காப்பாற்ற முயன்ற சங்கர்கணேஷின் கால் மற்றும் இடுப்பில் டிராக்டர் ஏறியதால் காயமடைந்தார்.தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., சுந்தரம், சப் இன்ஸ்பெக்டர் ஜோதி சம்பவ இடத்திற்கு சென்று, ராமதாஸ் சடலத்தை கைப்பற்றி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்..

படுகாயமடைந்த சங்கர்கணேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீதர், பரமசிவம், மகாராஜன் ஆகியோர் மீது ஒரத்துார் போலீசார் கொலை வழக்குப் பதிந்து தேடி வந்தனர். தலைமறைவான ஸ்ரீதர், விருத்தாசலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று காலை சரணடைந்தார். மகாராஜனை போலீசார் கைது செய்தனர்; தலைமறைவாக உள்ள பரமசிவத்தை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X