பெண்ணைத் தாக்கி நகையை கொள்ளையடித்த வழக்கில் பெண் உட்பட 5 பேர் கைது

Added : டிச 29, 2021 | |
Advertisement
கச்சிராயபாளையம், : கச்சிராயபாளையம் அருகே போலீஸ் என கூறி பெண்ணைத் தாக்கி 9 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த காரனுார் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி அலமேலு, 40; கணவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். மகன் மற்றும் மகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து

கச்சிராயபாளையம், : கச்சிராயபாளையம் அருகே போலீஸ் என கூறி பெண்ணைத் தாக்கி 9 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த காரனுார் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி அலமேலு, 40;

கணவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். மகன் மற்றும் மகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.கடந்த 20ம் தேதி இரவு 10:00 மணியளவில் அலமேலு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் தங்களை போலீஸ் எனவும், நீங்கள் 12 வயது சிறுமியை சட்ட விரோதமாக வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக புகார் வந்துள்ளது. அதனால், வீட்டை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி வீட்டிற்குள் நுழைந்து அலமேலுவை தாக்கி விட்டு வீட்டிலிருந்த 9 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.இந்நிலையில், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி உமாராணி, 33; மதுரை மாவட்டம், மேலுார் மனப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் மகன் மச்சராஜா, 32; காந்தி நகர் கருப்பையா மகன் தினகரன் 36; உசிலம்பட்டி, கருக்கட்டாம்பட்டி பாண்டி மகன் தங்கபாண்டி, 30; உசிலம்பட்டி ஜெயக்கொடி மகன் கணேஷ்குமார், 33; ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 9 சவரன் நகை மற்றும் 'பிரஸ்னோ' காரையும் பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X